என் மலர்
நீங்கள் தேடியது "பிரமோற்சவம்"
- 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது.
- நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலம்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.
'பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் இக்கோவிலில் 'சொர்க்க வாசல்' தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா, சித்திரை பெருவிழா ஆகியவை வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக உற்சவர் சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், நாதஸ்வர மேளதாளம் முழங்க கொடிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.முக்கிய நிகழ்வாக வருகிற 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு தரிசனமும், 14-ந்தேதி தைப்பொங்கல் தினத்தன்று தேரோட்டமும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சிவசங்கரி, உதவி ஆணையர் சாந்தா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாதம், ஆடி மாதம் என ஆண்டுக்கு 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பெருமாளை வணங்கு வதற்காக குளத்தில் இருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைத்தார். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.
இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவா பரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டு உத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மேள, தாள வாத்தியங்கள் முழங்க கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.
இதையடுத்து பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
- ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரி குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீதேவி பூதேவி யுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாக னம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 1-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடை பெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 21-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகிழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார்.
பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாட வீதியில் சென்று வந்து நிலையை அடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா"என்ற பக்தி கோஷம் எழுப்புவார்கள். அன்று இரவு தீர்த்தவாரி அவரோகணம், 23-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதிஉலா, 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
- பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
- கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதமாக 9 நாட்கள் உற்சவத்தை நடத்தினார்.
பிரம்ம தேவர் நடத்திய உற்சவம் என்பதால் திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரமோற்சவம் என்று அழைக்கப்பட்டு வருவதாக புராணங்கள் கூறுகிறது.
இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
22-ந்தேதி கருட சேவை 23-ந் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி திருத்தேர் 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர்.
பிரமோற்சவ நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், வாகன சேவைகள் நடைபெற உள்ளன. அப்போது 9 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
கருட சேவை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிவார்கள். அப்போது பக்தர்கள் நெரிசல் இன்றி எளிதில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
கருட சேவையின் போது 2 அல்லது 3 மணி நேரம் வரை பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.
திருப்பதி பிரமோற்சவ விழாவை வெட்டி ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்.
- பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழா நடைபெற உள்ளன.
வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
பிரமோற்சவ விழா போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது:-
செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின் முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கை வழங்குகிறார்.
வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.
மேலும் வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. அறைகள் முன்பதிவு அன்னபிரசாதம் லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.
பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மகாமுனி ஜெயந்தியை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,132 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 963 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
- காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலவரம் காரணமாக இருக்கன்குடி மாரியம்மனை வழிபட வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது பற்றி பரம்பரை பூசாரி வருத்தப்பட்டு அம்பாளிடம் கேட்டார். அப்போது அம்மன் குரல் அசரீரியாக ஒலித்தது.
குழந்தாய்! நீ வருந்தாதே. நாளை என்னிடம் இருந்து 2 நல்ல பாம்புகள் வரும். அவற்றிடம் நீ அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதை கேட்டதும் பூசாரி உற்சாகமானார். மறுநாள் அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பூஜைகள் நடத்தினார்.
பூஜை நடத்தி முடித்ததும் அம்மன் சொன்ன மாதிரியே 2 நல்ல பாம்புகள் அம்மன் சிலை பின்னால் இருந்து வந்தன. அவற்றை பார்த்ததும் பூசாரி, வாருங்கள், வாருங்கள், இதோ உணவு சாப்பிடுங்கள் என்று கூறி தான் தயாராக வைத்திருந்த முட்டையை எடுத்து வைத்தார்.
முட்டையை குடித்த 2 பாம்புகளும் பிறகு மீண்டும் அம்மன் சிலை பின்னே சென்று மறைந்தன. பிறகு அந்த இரண்டு பாம்புகளும் அடிக்கடி பூசாரியிடம் வந்து சென்றன.
பூசாரியும் அந்த பாம்புகளை வரவேற்று உணவு கொடுப்பது வழக்கமானது. நாளடைவில் அந்த பாம்புகள் பூசாரியிடம் செல்லப்பிராணிகள் போல மாறி பழகின.
சில நாட்கள் கழித்து பூசாரி தன் மனைவி முத்து லட்சுமியிடம், இனி நான் இரவில் கோவிலில் தான் தூங்கப்போகிறேன் என்றார். அதன்படி இரவில் கோவில் சன்னதியில் தங்கி வந்தார்.
அப்போது இரண்டு பாம்புகளும், பூசாரியுடன் படுத்துக்கொண்டன. இதை நிறைய பேர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
அந்த காலத்தில் இந்த சம்பவம் இருக்கன்குடி மாரியம்மன் நிகழ்த்திய அற்புதமாக தென் மாவட்ட மக்களிடம் பேசப்பட்டது.
* அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது.
* காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.
* கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணை குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படியே நடக்க வேண்டும்.
* மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
* கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது.
* இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது.
* விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக் கூடாது.
* சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல், சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது.
* ஸ்தூபி, கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
* பிறர் வீட்டில் அன்னம் புசித்த அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.
* கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக் கூடாது.
* வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.
* மரணத்தீட்டு உள்ளவர்களையோ தீட்டு உள்ளவர்களோ அல்லது அத்தீட்டு உடையவரைத் தொட்டபின் குளிக்காமலோ கோவிலுக்குச் செல்லக் கூடாது.
* கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- மூர்த்திகளை தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
- காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்கு செல்லக் கூடாது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலவரம் காரணமாக இருக்கன்குடி மாரியம்மனை வழிபட வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது பற்றி பரம்பரை பூசாரி வருத்தப்பட்டு அம்பாளிடம் கேட்டார். அப்போது அம்மன் குரல் அசரீரியாக ஒலித்தது.
குழந்தாய்! நீ வருந்தாதே. நாளை என்னிடம் இருந்து 2 நல்ல பாம்புகள் வரும். அவற்றிடம் நீ அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதை கேட்டதும் பூசாரி உற்சாகமானார். மறுநாள் அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பூஜைகள் நடத்தினார்.
பூஜை நடத்தி முடித்ததும் அம்மன் சொன்ன மாதிரியே 2 நல்ல பாம்புகள் அம்மன் சிலை பின்னால் இருந்து வந்தன. அவற்றை பார்த்ததும் பூசாரி, வாருங்கள், வாருங்கள், இதோ உணவு சாப்பிடுங்கள் என்று கூறி தான் தயாராக வைத்திருந்த முட்டையை எடுத்து வைத்தார்.
முட்டையை குடித்த 2 பாம்புகளும் பிறகு மீண்டும் அம்மன் சிலை பின்னே சென்று மறைந்தன. பிறகு அந்த இரண்டு பாம்புகளும் அடிக்கடி பூசாரியிடம் வந்து சென்றன.
பூசாரியும் அந்த பாம்புகளை வரவேற்று உணவு கொடுப்பது வழக்கமானது. நாளடைவில் அந்த பாம்புகள் பூசாரியிடம் செல்லப்பிராணிகள் போல மாறி பழகின.
சில நாட்கள் கழித்து பூசாரி தன் மனைவி முத்து லட்சுமியிடம், இனி நான் இரவில் கோவிலில் தான் தூங்கப்போகிறேன் என்றார். அதன்படி இரவில் கோவில் சன்னதியில் தங்கி வந்தார்.
அப்போது இரண்டு பாம்புகளும், பூசாரியுடன் படுத்துக்கொண்டன. இதை நிறைய பேர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
அந்த காலத்தில் இந்த சம்பவம் இருக்கன்குடி மாரியம்மன் நிகழ்த்திய அற்புதமாக தென் மாவட்ட மக்களிடம் பேசப்பட்டது.
* அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது.
* காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.
* கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணை குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படியே நடக்க வேண்டும்.
* மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
* கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது.
* இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது.
* விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக் கூடாது.
* சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல், சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது.
* ஸ்தூபி, கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
* பிறர் வீட்டில் அன்னம் புசித்த அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.
* கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக் கூடாது.
* வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.
* மரணத்தீட்டு உள்ளவர்களையோ தீட்டு உள்ளவர்களோ அல்லது அத்தீட்டு உடையவரைத் தொட்டபின் குளிக்காமலோ கோவிலுக்குச் செல்லக் கூடாது.
* கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- இருக்கன் குடியே விழாக்கோலம் பூண்டு திரும்பிய திசை எல்லாம் பக்தர்களாக காணப்படுவார்கள்.
- தன்னை அண்டிய அத்தனை பேருக்கும் வாக்கு சொல்லி வரம் அளிப்பாள்.
இருக்கன்குடி கோவிலில் விநாயகர் அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார். அருகே வாழவந்தானும், அதற்கு மேற்கே ராக்காச்சி அம்மனும் உள்ளனர். வடமேற்கு பகுதியில் பேச்சியம்மனும், முப்புடாதி அம்மனும் தனிதனி சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
கிழக்கு பகுதியில் காத்தவராயன் கோவில் அமைந்துள்ளது. பைரவமூர்த்தி சன்னதியும் உள்ளது. கருப்பசாமி கோவில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த தெய்வங்களை வணங்கிவிட்டு அருகில் உள்ள கயிறு கட்டி மாரியம்மனையும் வழிபட்டு செல்வார்கள்.
பக்தர்கள் குவியும் திருவிழாக்கள்
கேட்டவர்களுக்கு கேட்ட வரங்கள் அளித்துவரும் மாரியம்மன் பக்தர்களின் நோய்களையும் தீர்த்து வருகிறாள். இதனால் கோவிலுக்கு நாளுக்குள் நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இத்திருத்தலத்தில் செய்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இடுக்கண்களையும் இருக்கன் குடியாளுக்கு ஆடி வெள்ளி அன்று நடைபெறும் பெருந்திருவிழா சிறப்புடையதாகும். அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொடி ஏற்றம் நடை பெறும்.
ஆடிகடைசி வெள்ளி அன்று உற்சவர் கோவிலில் இருந்து அன்னையின் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளி அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோவிலில் எழுந்தருள்வாள். இந்த திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் இருக்கன்குடியில் கூடுவார்கள்.
இருக்கன் குடியே விழாக்கோலம் பூண்டு திரும்பிய திசை எல்லாம் பக்தர்களாக காணப்படுவார்கள். அன்று விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் வேன், கார்களில் பக்தர்கள் அலை அலையாக வந்து கலந்து கொள்வார்கள். தை கடைசி வெள்ளி கிழமையிலும் விழா நடை நடைபெறும்.
அன்றும் பெருந்திரளான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். அன்று பக்தர்கள் அம்மனுக்கு அக்கினி சட்டி எடுத்தும், ஆயிரங்கண்பானை எடுத்தும்,மொட்டை போட்டும். மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.
தன்னை ஏற்று சாமியாடும் பக்தர்களைக் கூட தெய்வமாக்கிவிடும் கருணை உள்ளம் கொண்டவள் மாரி. அந்த மாரியர்களில் மகாசக்தி வாய்ந்தவள் இந்த இருக்கன்குடி மாரியம்மன். ஆடியில் இந்த அம்மனை தரிசித்து அருள் பெற்று வாருங்கள்.
இருக்கன்குடி அமர்ந்தவளே; எக்குடிக்கும் தாயாரே!
வார்ப்புச் சிலையாளே; வச்சிரமணித் தேராளே!
வருத்த வகையறியேன்; வர்ணிக்கப் பேரறியேன்!
பேரு மரியேனம்மா, பெற்றவளே யென்தாயே!
இருக்கன்குடியை விட்டு என் தாயே வாருமம்மா!
ஆடி மாதம் பிறந்துவிட்டதால் இருக்கன்குடி மாரியாயி கோவில் முழுக்க கொண்டாட்டம்தான். தெற்கே இருக்கிற கிராமியப் பாடகர்கள் எல்லாரும் கூடி இருக்கன்குடி மாரியைப் பாடல்களால் வர்ணித்து அழைப்பது வழக்கம். ஆத்தா இருக்கன்குடி மாரியும் அவர்களின் பாடலுக்கு மனமிரங்கி வந்து அருள் மழை பொழிவாள்.
தன்னை அண்டிய அத்தனை பேருக்கும் வாக்கு சொல்லி வரம் அளிப்பாள். இவளை வணங்கியவர்கள் வெறுங்கையோடு போனதே இல்லை என்கிறார்கள் இந்த ஊர்க்கார்கள். உண்மைதான், மாரியின் பாடல்களாலும் வேப்பிலை, எலுமிச்சை வாசத்தாலும் கிரங்கித்தான் கிடக்கிறது இருக்கன்குடி.
பூஜை கால நேரங்கள்
தினந்தோறும் இத்திருக்கோவிலில் ஆறுகால பூஜைகள் கீழ்கண்ட விபரப்படி நிகழ்கின்றன.
காலை நடை திறப்பு-5 மணி
1. உதய பூஜை-7 மணி (காலை)
2. கால சந்தி பூஜை-9 மணி (காலை)
3. திருக்கால சந்தி பூஜை-11 மணி (காலை)
4. உச்சிக்கால பூஜை-1 மணி (பிற்பகல்)
5. சாயரட்சை பூஜை-6 மணி (மாலை)
6. அர்த்த பூஜை-8 மணி (இரவு)
பிரதி செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக காலை முதல் இரவு பூஜை முடியும் வரை சன்னதி திறந்து வைக்கப்பட்டு இருக்கும். மற்ற தினங்களில் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை சன்னதி பூட்டப்பட்டிருக்கும். தினமும் 2 நேரம் அபிஷேகம் செய்யப்படுகிறது.
- இருக்கன்குடிதெய்வமே! தினமும் உன்னை கையார கும்பிடுவோர்களது இடரை நீக்கி கருணை செய்வாய்.
- என்னுடைய வினைகளும் என்னை விட்டு அகல்வதற்கு தாயே! நீ அருள் செய்ய வேண்டும்.
இருக்கன்குடி மாரியம்மனை வழிபடும் போதோ, வழிபட்ட பிறகோ, கீழ்க்கண்ட பிரார்த்தனையை படித்தால் உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
தாமரை போன்ற அழகான முகத்தையும் மீன் போன்ற அழகான கண்களையும், பஞ்சு போன்ற மென்மையான அழகிய பாதங்களையும், வெண்மையான அழகிய பல் வரிசைகளையும் கண்ணார கண்டு மனப்பூர்வமாக உன்னை பணிய வேண்டுமானால் மேகம் போன்றகரிய அழகிய கூந்தலையுடைய மாரியம்மையே! நீ தான் அருள வேண்டும்.
விண்ணுலகை காக்கும் தலைவனான இந்திரனும் மற்ற தேவர்களும் உன் அருகில் வந்து உன்னுடைய தாமரை போன்ற அழகிய பாதங்களை விரும்பி துதிப்பார்கள். அதனால் அவர்கள் கண்ணியமாகிற மேம்பாட்டினைப் பெறுவார்கள்.
தேவர்களுக்கு நீ இவ்வாறு அருள் செய்வதால் கருணைக்கு நீ ஒருத்தியே! உனக்கு நிகர் வேறு யாருமில்லை. மாரிமுத்தே! இத்தகைய உன்னை நான் கண்டு தொழுவதற்காகவே நீ இவ்விருக்கன்குடி மண்ணில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருகிறாய்.
இருக்கன்குடி மாரிமுத்தே! நீ கூர்மை நிறைந்த வேல் போன்ற கண் அழகுடைய பெண்களிடத்தில் வைக்கும் ஆசையை மாற்றுவாய்! பொய்யும்களவும் இவற்றால் உண்டாகும் கோபங்களும் ஆகிய குற்றங்களைப் போக்குவாய். மை பொருந்திய கண்களுடைய இருக்கன்குடித் தெய்வமே! தினமும் உன்னை கையார கும்பிடுவோர்களது இடரை நீக்கிக் கருணை செய்வாய்.
ஒளி பொருந்திய பசுங்கொடி போன்ற இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! கடல் அலைபோல ஓயாமல் வளர்ந்து பெருகும் எனது கொடூரமான பாபங்களை தீர்ப்பாயாக! அதற்காக காலை, மதியம், மாலை இம்முப்போதுகளிலும் என் முன் வந்து அருள் செய்ய வேணுமாய் வேண்டுகிறேன்.
மங்கையர் தலைவியே! இருக்கன்குடி மாரிமுத்தே! என் அருமைத் தாயே! குங்குமம் பூசப்பெற்ற தனங்களையுடைய கொடி போன்ற மெல்லிய உடல் அழகு வாய்ந்த பெண்களிடம் வைக்கும் ஆசை வழியாகப் புகுவான் எமதேவன்.
அதனால் இடையூறுகளை அடையும் பிறவியாகிற உடல் ஏற்படும். அதில் பிணி பிசி, மூப்பு என்ற துயர்கள் உண்டாகும். அத்துயரை சூரியனுக்கு எதிரில் பனி போவதுபோல அம்மே! நீ போக்கி அருள வேண்டுகிறேன். பிறப்பு எடுத்தது பிறப்பு முடிப்பதற்காகவே என்று எண்ணாமல், மேலும்மேலும் பற்பல பிறப்புகளை எடுப்பதற்கு காரணமான வினைகளைச் செய்வதால் மாயாத மாயப் பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. இப்பிறவி நோயை தீர்த்துக் கொள்ள நிதி படைத்தவர்தான் தர்மங்கள் செய்து நல்ல வழி தேடிக் கொள்ளலாம்.
ஆனால் உலோபம் என்ற கருமித்தனத்தால் அவ்வாறு செய்வதில்லை. மனதால் கூட ஒரு சிறு பொருளையும் பிறருக்கு கொடுக்க மாட்டாத உலோபியராய் வாழ்வர். அத்தகைய உலோபியரது செல்வம் அவருக்கு பயன்படாமல் அவரை விட்டுவிட்டு மாயமாய் மறைந்து போவது நீதிநூல் வழக்கு.
அதுபோல என்னுடைய வினைகளும் என்னை விட்டு அகல்வதற்கு தாயே! நீ அருள் செய்ய வேண்டும். மனம் சலியாமலும் உன்னுடைய அழகிய முகம் கோணாமலும் உனது வாயார ஒரு நன்மொழி கூறுவாயாக! அதாவது உன்பாவங்கள் கழிய கடவுவதாக என்று ஒரு அருள்மொழி கூறுவாயாக.
இருக்கன்குடியில் அமர்ந்தருளும் மாரிமுத்தே! வர்ணங்கள் நிறைந்த அழகிய பட்டாடை அணிந்திருப்பவளே! உன்னைத் தினமும் நூறு தடவை பணிந்து வழிபடுவேன். இவ்வாறு வேறு ஒரு தெய்வத்தையும் நான் பணிய மாட்டேன். இத்தகைய என்னைத் தந்தையும் தாயும் குழந்தைக்கு அருள் செய்வதுபோல் நீ எனக்கு இரக்கம் காட்டித் தினமும் என்முகம் பார்த்து அருள் தருவாயாக.
மத்த மலரையும், பிறையையும், சடையில் உடையவளே இருக்கன்குடியில் அமர்ந்திருக்கும் மாரிமுத்து! எத்தனையோ பல தலங்களில், மாரியம்மன் என்னும் உன் திருநாமத்தின் புகழ் பரவியிருக்கிறது. அத்தலங்களில் போய் வழிபட்டாலும் அவ்வழி பட்டவர்களுக்கு இடர்கள் நீங்குவது இத்தலம் வந்து வழிபட்ட பிறகுதான்.
அருள் நிறைந்த இத்தலத்தில் வந்து பணிந்தவர்களுக்கே இடர் நீங்கும் என்றதால் இதன் பெருமைக்கு ஈடுவேறில்லை.
அழகிய உருவமுடையவளே! சிவபெருமானின் ஆசைக்கு உரியவளே! தினமும் உனது அழகிய பாதத் தாமரைகளை நினைந்து உருகிப் பக்தியுடன் வழிபடுவோர்களது துன்பங்களை நீக்கி இன்பத்தைக் கொடுப்பாய். அவ்வாறே எனக்கும் மனம் வைத்து அருள் செய்து என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.
- ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது.
- தை, பங்குனி, ஆடி ஆகிய 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருவிழா கோலாகலத்தை காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்தலில் தினம், தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபடி உள்ளனர்.
தீ சட்டி எடுக்கவும், மாவிளக்கு போடவும், மொட்டை அடித்துக்கொள்ளவும் தினந்தோறும் பக்தர்கள் வந்தபடி இருக்கிறார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
தை, பங்குனி, ஆடி ஆகிய 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் வகையில் பக்தர்கள் அலை, அலையாக வருவதை காணலாம். இந்த 3 மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை நாட்களில் மாரியம்மன் அருள் பெற திரளும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும்.
இந்த 3 மாதம் தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது. பொதுவாக ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதம் என்பார்கள்.
தேவலோகத்தில் தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் பகல் பொழுதுவாகவும், ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் இரவு பொழுதுவாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஆடி மாதம் பகல் முடிந்து இரவு நேரம் தொடங்கும் காலமாக கருதப்படுகிறது.
இதை தட்சிணாயன புண்ணிய காலம் என்பார்கள். இத்தகைய புண்ணிய காலத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் மட்டுமே ஊர் மத்தியில் உள்ள உற்சவ அம்மன் வெளியில் வீதி உலா வருகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
நித்தம், நித்தம் தன்னைத் தேடி வரும் பக்தர்களை தானே தேடிச் சென்று தரிசனம் தருவது தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.
ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3-வது வெள்ளிக்கிழமையன்று கொடியேற்ற வைபவம் நடைபெறும். அன்று காலை 5 மணியளவில் இருக்கன்குடி கிராம பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப்பிலைக்கொடி கட்டுவார்கள்.
இதில் நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். கடைசி வெள்ளிக்கிழமையன்று பகலில் ரிஷப வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் கோவிலில் இருந்து எழுந்தருள்வாள். பிறகு வீதி வலம் வருவாள்.
நதியில் அம்மன் உலா வரும் போது மக்கள் திரளாக நின்று வணங்குவார்கள். பிறகு மூலவர் கோவிலை சென்றடையும் அம்மன் இரவு முழுவதும் அங்கு சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவாள்.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மேல் மூலவர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர் மத்தியில் இருக்கும் உற்சவர் கோவிலை மீண்டும் அம்மன் சென்று அடைவாள். அப்போது பக்தர்கள் மேள, தாளம், நகரா ஒலி எழுப்ப உற்சவத்தை சிறப்பு செய்வார்கள்.
ஆடி பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.