என் மலர்
நீங்கள் தேடியது "மண்டபம்"
- கடல் வழியாக கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
- போலீசார் வேதாளை பஸ் ஸ்டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்த கடல் வழியாக தங்கம், கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களாகன கடல் குதிரை, திமிங்கல எச்சம் போன்றவையும் கடத்தப்படுகிறது. இந்த நிலையில் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதிக்கு இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடல் அட்டைகள் கொண்டு வருவதாக மண்டபம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வேதாளை பஸ் ஸ்டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்த போது அதில் 5 மூடைகளில் 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது. இதுதொடர்பாக மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் சுல்தான் மகன் சாகுல் ஹமீது (37) போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்திருந்த தாக தெரிய வந்தது, இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்த அரங்கம் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
- விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்து றை அமைச்சர் சாமிநாதன், தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ரூ.89.54 லட்சம் செலவில் நினைவக கட்டட புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-
தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கம் செய்தித்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த அரங்கம் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் இருந்துள்ளனர்.
தற்போது முதல்-அமைச்சர் கவனத்தி ற்கு கொண்டு சென்று ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று சரியான முறையில் பராமரிக்கும் அரசு நிர்வாகத்துறையிடம் ஒப்படைத்து மக்கள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.உ.அ ர்ச்சனா அவர்கள், பொதுப்ப ணித்து றை செயற்பொறி யாளர் திரு.பால ரவிக்குமார் அவர்கள், உதவி செயற்பொறி யாளர்கள் திருமதி. அல்மாஸ் பேகம் அவர்கள், திரு.ராமர் அவர்கள், மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் திரு.என்.செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய கோவில்.
- காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஸ்தலமாகவும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவதாகவும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்று, பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில் கோயிலில் தேரோட்டம் நான்கு வீதிகளில் வலம் வந்தது.
இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரெங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி சன்னதியை வந்தடைந்தது.
பின்னர் மதியம் 1:30 மணி அளவில் நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், நிர்வாக அலுவலர் ரம்மியா, கோயில் அலுவலர் விக்னேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொன் சாமிதரிசனம் செய்தனர்.
- திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
- கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தை பார்வையிட்டார்.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுர ஆதினத்திற்கு உட்பட்ட சட்டைநாத சுவாமி தேவதானத்தை சேர்ந்த குமரக்கோவில் பிடாரிவடக்கு வீதியில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1986ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் நடைபெ ற்றது.
அதன்பிறகு இக்கோ யிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதினம் 27-வது குருமகாசந்நிதானம் ஏற்பாட்டின்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதனிடையே திருப்ப ணிகளை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயில் விமானகலச பணிகள், மூலவர் சந்நிதி பணிகள், வெளிமண்டபம் பணிகள், கருங்கற்கள் பிரகார பதிப்பு பணிகள், முகபு மண்டபம் திருப்பணிகள் ஆகியவற்றையும், வர்ணபூச்சு பணிகளையும் தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தையும் பார்வை யிட்டார்.
அப்போது சட்டைநாதர் கோயில் கணக்கர் செந்தில், தமிழக கோயில் சொத்து பாதுகாப்பு மீட்புக் குழு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் பந்தல்.முத்து, தி.மு.க. நிர்வாகி பாபு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி:
புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை யொட்டி கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது.
இந்த 6நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக இருந்தனர். அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இன்றும் கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதி காலையில் சூரியன் உதய மாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதி காலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந் தனர்.அவர்கள் காலை 8மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்கள் களை கட்டியது.
இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 ஆயிரத்து 546சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.
- சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெரு மானை தரிசனம் செய்து வருகிறார்கள்.
முகூர்த்த நேரத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு மலை மீதுள்ள சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் உபயதாரர் நிதி மூலம் ரூ.93 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் கோவில் நிதி மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டிடம் கட்ட கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.