என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவம்"
- மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது.
- நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையும், புதுடில்லி பாரதீய மொழிகள் குழுமமும் இணைந்து அகத்திய மாமுனிவர் ஜெயந்தி விழா மற்றும் தேசிய மாநாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை தாங்கி பேசுகையில், மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது. அகத்திய மாமுனிவர் மறைந்துவிடவில்லை இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். நமது அன்னை பூமியான பாரதநாடு உள்ளவரை அகத்திய மாமுனிவரும் வாழ்ந்து கொண்டிருப்பார் என பேசினார். நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலா மாநாட்டைத் தொடங்கி வைத்துக் கருத்தரங்கு மலரை வெளியிட்டுப் பேசினார். கர்நாடக மாநிலம் மைசூரின் மூத்த வக்கீலும் அகத்திய மரபின் ஆய்வாளருமாகிய ஷாமா பட் மாநாட்டின் மைய உரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது. அவர் பாரத தேசம் முழுமைக்கும் உரியவராகத் திகழ்கின்றார். அகத்தியரின் படைப்புகள், பங்களிப்புகள், மருத்துவ மரபுகள் இந்திய மொழிகளின் தோற்றத்திற்கும் தொன்மைக்கும் சிறப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குகின்றன. வடமொழிக்கும் தமிழுக்குமான இணைப்புப் பாலமாக அகத்தியர் திகழ்ந்து வருகின்றார். இந்த இரு மொழிகளும் உலகின் பழமையான மற்றும் சிறப்பான மொழிக்குடும்பங்களாக, செம்மொழிகளாகத் திகழ்கின்றன.
பாரத தேசத்திற்கு அகத்தியர் மாமுனிவர்தான் முதுகெழும்பாகத் திகழ்கின்றார். இந்திய மூலிகை மருத்துவ அறிவின் தோற்றமாகவும் அவரது மருத்துவ மூலிகைகளின் நூல்கள் விளங்குகின்றன.
மருத்துவத்துறையில் அவரின் பங்களிப்புகள் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. அகத்தியர் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அவரைப் பற்றிய முழுத்தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். துளு என்னுடைய தாய்மொழி. தமிழில் நீங்கள் கூறும் மருந்து என்னும் சொல் துளு மொழியிலும் மருந்து என்றே வழங்கப்படுகின்றது என்றார்.
மாநாட்டில் பேராசிரியர் அரங்க. ராமலிங்கம், பழனி ஐவர்மலை அனாதி நிறுவனத்தின் நிறுவனர் ஆதி நாராயண சுவாமிகள், தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்தகுமார், பேராசிரியர்கள் முத்தையா, சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாரம்பரிய மருத்துவர்கள் அகத்தியர் மருத்துவ குறிப்பு சம்பந்தமான கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மாநாட்டில் பல்கலைக்கழக வேளாண்மை துறை சார்பில் சித்த மருத்துவ மூலிகைகள், காணிக்காரப் பழங்குடிகளின் மருந்துப் பொருட்கள், மருத்துவத் தாவரங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற்றிருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சித்த மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு அகத்தியர் பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- மருத்துவமனையில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.
- 'ஆண்ட்ராய்டு போபியோ' பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது
அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மறுத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
விடியா திமுக ஆட்சியில் முதல்வரோ, மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இன்றி கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்; அமைச்சரோ தனக்கொரு துறை இருப்பதையே மறந்துவிட்டு வாரிசுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார்.
மக்கள் பற்றிய சிந்தனையே இல்லாத விடியா திமுக ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு, தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.
அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததை தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க் கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்.
எக்ஸ் தளத்தில் எழுத எதுவும் கிடைக்காதா? எனத் தினமும் ஏங்கும் 'ஆண்ட்ராய்டு போபியோ' வந்து பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது போல. எந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகள் செயல்பட ஜெனரேட்டர் உட்பட எல்லா முன்னேற்பாடுகளுடன்தான் அரசு மருத்துவமனைகள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
காலி பணியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். வரும் ஜனவரி 5-ம் தேதி கூட 2,553 டாக்டர்கள் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.
கூட்டணிக் கட்சிகள் யாராவது வர மாட்டார்களா? என அல்லாடும் பழனிசாமிக்குக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்றால் அடி வயிறு எரியத்தானே செய்யும். துணை முதல்வர் பிறந்தநாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்திருந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அதனை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தினோம். அந்த நிவாரண உதவி நிகழ்ச்சியையும் கேலி செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை எள்ளி நகையாடுகிறார் எதிர்க் கட்சித் தலைவர்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
- தனது உடலின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரத்தொடங்கிய ராஜ்குமார் பேசுவதற்கும் சிரமப்பட்டுள்ளார்.
- மூளைக்கு ரத்தம் அனுப்பும் கரோடிட் ஆர்டரி [carotid artery] சேதமானதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பார்பர் ஷாப்பில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட 30 வயது இளைஞர் பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்லாரியை சேர்ந்த ராஜ்குமார் என்ற 30 வயது நபர் கடந்த 2 மாதங்கள் முன்பு வழக்கமாக முடிவெட்டிக்கொள்ளும் சலூனில் இலவசமாக ஹெட் மசாஜ் செய்துகொள்ள முற்பட்டுள்ளார். அந்த பார்பர், ராஜ்குமாரின் தலையை ஹெட் மசாஜ் என்ற பெயரில் கடுமையாக மீண்டும் மீண்டும் திரும்பியுள்ளார்.
இதனால் அசவுகர்யமாக உணர்ந்த ராஜ்குமார் அதன்பின் வலியை கண்டுகொள்ளாமல் வீடு திரும்பி சாதாரணமாக வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சில மணி நேரங்களிலேயே தனது உடலின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரத்தொடங்கிய ராஜ்குமார் பேசுவதற்கும் சிரமப்பட்டுள்ளார். தனது உடலில் எதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்து உடனே மருத்துவமனைக்குச் சென்றார்.
ராஜ்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். ஹெட் மசாஜ் விவரத்தை அறிந்த மருத்துவர்கள் ராஜ்குமாரின் கழுத்து கடுமையாக திருப்பப்பட்டத்தில் மூளைக்கு ரத்தம் அனுப்பும் கரோடிட் ஆர்டரி [carotid artery] சேதமானதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து ரத்தம் உறைதலை சரி செய்ய கடந்த 2 மாத காலமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் வல்லுநர்கள் அல்லாமல் ஹெட் மசாஜ் செய்து கொள்வதில் உள்ள ஆபத்தைக் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
- நவம்பர் மாதம் 25-ந் தேதி வெளியிட உள்ளதாக தகவல்.
மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை இந்தி மொழியில் உத்தரபிரதேச மாநிலம் மொழி பெயர்த்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதேபோல் தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மருத்துவப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான 5 புத்தகங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் மொழி பெயர்க்கப்பட்டன. இதில் மருத்துவ உடற்செயலியல் உள்ளிட்ட 2 புத்தகங்கள் அதிக பக்கங்களையும், 3 புத்தகங்கள் குறைந்த பக்கங்களையும் கொண்டவையாக இருந்தன.
அதன்படி, மருத்துவ உடற்செயலியல் புத்தகம் முதலில் வெளியிடும் போது, முதல் தொகுதி மட்டும் வெளியிடப்பட்டது.
தற்போது அதன் 2-வது தொகுதியையும் சேர்த்து முழு புத்தகமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 36 மருத்துவக்கல்லூரிகள், நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கான 700 முதல் 800 பக்கங்களை கொண்ட 'மருத்துவ நுண்ணுயிரியியல்', 'மகப்பேறு மருத்துவம்' ஆகிய 2 புத்தகங்கள், என்ஜினீயரிங் படிப்புக்கான 4 புத்தகங்கள், இதுதவிர அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான ஆங்கில வழி புத்தகங்கள், தமிழ்வழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன.
அதேபோல், ஆங்கில இலக்கியங்கள் தமிழிலும், தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதாகவும், வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்த புத்தகங்களை சசிதரூர் எம்.பி. வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற உயர்கல்விச் சார்ந்த 200 பாடப்புத்தகங்களை ஒவ்வொரு ஆண்டும் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொள்கிறது.
அதன்படி, தற்போது வரை 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்து நவம்பரில் வெளியிட உள்ள நிலையில், மீதமுள்ள புத்தகங்கள் வருகிற ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.
- கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
- அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கால்களில் வீக்கம்
ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.
மஞ்சள் காமாலை
எப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
வயிற்று உப்புசம் மற்றும் வலி
கல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.
வாந்தி, சோர்வு, காய்ச்சல்
கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி. உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
தலைச்சுற்றல்
ஆல்கஹால் குடிப்பவராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.
குமட்டல்
கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
அடர் நிற சிறுநீர்
கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால், உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிவரும். எனவே இந்த நிலையை நீங்கள் சந்தித்தால், தவறாமல் மருத்துவரை சந்தியுங்கள்.
சோர்வு
நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.
- வளைவு லேசானதாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால், அது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் தலையிடாது.
- உட்கார்ந்து அல்லது நிற்கும் போது சரியான தோரணையை பராமரிக்கவும், இது முதுகெலும்பு மேலும் சுழற்சி அல்லது வளைவைத் தடுக்கலாம்.
ஸ்கோலியோசிஸ் என்பது முதுகுத் தண்டு பக்கவாட்டு வளைவைக் காட்டும் ஒரு உடல் கோளாறு ஆகும். இந்த நிலை பொதுவாக நீங்கள் குழந்தையாகவோ அல்லது இளைஞனாகவோ இருக்கும்போது தோன்றும். வளைவின் கோணம் சிறியது, மிதமானது அல்லது பெரியது. உங்கள் முதுகுத்தண்டின் சுழற்சி கோணம் 10 டிகிரிக்கு மேல் இருக்கும் போது மருத்துவர்கள் நிலைமையை கண்டறிகின்றனர். எலும்பியல் வளைவின் தன்மையை விவரிக்க "S" அல்லது "C" எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது.
ஸ்கோலியோசிஸின் முதன்மை அறிகுறிகள்:
உங்களுக்கு கோளாறு இருந்தால், நீங்கள் நிற்கும்போது கற்றுக் கொள்வீர்கள். இது போன்ற பிற அறிகுறிகள் இருக்கும்:
• உங்கள் முதுகில் தெரியும் வளைவு
• சீரற்ற தோள்கள்
• சீரற்ற இடுப்பு
• ஒரு தோள்பட்டை கத்தி மற்றொன்றை விட பார்வைக்கு அதிகமாகத் தோன்றும்.
• விலா எலும்புக் கூண்டின் ஒரு பக்கத் திட்டம்.
• நீங்கள் முன்னோக்கி குனியும்போது பின்புறத்தின் ஒரு பக்கத்தில் தெரியும் முக்கியத்துவம்.
• ஒரு இடுப்பு அருகில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முதுகெலும்பு பக்க வளைவுடன் சேர்ந்து சுழலும் அல்லது சுழலும். சுழற்சியானது உடலின் மேற்புறத்தில் உள்ள தசைகள் மற்றும் விலா எலும்புகளை மறுபுறம் இருப்பதை விட முக்கியமாக ஒட்டிக்கொள்ளும். கூடுதலாக, காணக்கூடிய அறிகுறிகள் பின்வருமாறு:
• முதுகெலும்பு விறைப்பு
• கீழ்முதுகு வலி
• தசைப்பிடிப்பு காரணமாக சோர்வு
• கால்களில் வலி மற்றும் உணர்வின்மை
ஸ்கோலியோசிஸின் காரணங்கள்:
சில வகையான ஸ்கோலியோசிஸ் குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டுள்ளது. மருத்துவர்கள் இந்த வளைவுகளை இரண்டு முதன்மை வகைகளாகப் பிரிக்கிறார்கள் - கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு அல்லாதவை.
கட்டமைப்பு இல்லாத நிலையில், முதுகெலும்பு பொதுவாக வேலை செய்யும், இருப்பினும் வளைவு தெரியும். போன்ற பல்வேறு காரணங்களால் இது நிகழலாம்
தசைப்பிடிப்பு
• ஒரு கால் மற்றதை விட நீளமானது
• குடல் அழற்சி போன்ற அழற்சிகள்
கட்டமைப்பு கோளாறில், வளைவு கடினமானது மற்றும் மீள முடியாதது. காரணங்கள்:
• பெருமூளை வாதம் போன்ற நரம்புத்தசை நிலைகள்.
• கடுமையான தசைநார் சிதைவு, இது தசை பலவீனத்தை விளைவிக்கும் ஒரு மரபணு கோளாறு ஆகும்.
• முதுகெலும்பு தொற்று மற்றும் காயங்கள்
• ஸ்பைனா பிஃபிடா போன்ற குழந்தையின் முதுகெலும்பு எலும்புகளை பாதிக்கும் பிறவி குறைபாடுகள்.
• கட்டிகள்
• டவுன்ஸ் சிண்ட்ரோம் அல்லது மார்பன் சிண்ட்ரோம் போன்ற மரபணு நிலைமைகள்.
• முள்ளந்தண்டு வடம் அசாதாரணங்கள்
பிசியோதெரபிஸ்ட்டை எப்போது பார்க்க வேண்டும்:
உங்கள் பிள்ளையில் ஸ்கோலியோசிஸின் அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், மருத்துவரிடம் செல்வது கட்டாயமாகும், முன்னுரிமை எலும்பியல் மருத்துவர். மெதுவான வளைவுகள் உங்களுக்குத் தெரியாமல் படிப்படியாக உருவாகலாம், ஏனெனில் படிப்படியான தோற்றம் ஆரம்பத்தில் எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் குழந்தை பதின்ம வயதினராக வளரும்போது, வலியின் தோற்றம் ஏற்படலாம். குழந்தை முதுகுவலி அல்லது விறைப்பு பற்றி புகார் செய்தால் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.
ஸ்கோலியோசிஸின் ஆபத்து காரணிகள்:
ஸ்கோலியோசிஸின் பொதுவான வகைகளை உருவாக்க எண்ணற்ற ஆபத்து காரணிகள் உள்ளன. இவை:
வயது: இளமை பருவத்தில் ஆரம்ப அறிகுறிகளும் அறிகுறிகளும் தொடங்குகின்றன.
குடும்ப வரலாறு: குடும்பத்தில் நிலைமை இயங்குகிறது. ஆனால் இந்த கோளாறால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு குடும்ப வரலாறு இல்லை.
பாலினம்: லேசான ஸ்கோலியோசிஸின் வளர்ச்சி விகிதம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளில் ஒரே மாதிரியாக இருக்கும். இருப்பினும், பெண்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் வளைவு மோசமடைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
ஸ்கோலியோசிஸை எவ்வாறு தடுப்பது:
நிலைமையைத் தடுப்பதற்கான வழிகள் பற்றி நிரூபிக்கப்பட்ட உண்மை எதுவும் இல்லை. இருப்பினும், காயத்தால் வளைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றலாம்.
உங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருந்தால், கழுத்து, முதுகு மற்றும் தோள்களில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால், அதிக கனமான பைகளை எடுத்துச் செல்ல நீங்கள் அவர்களை அனுமதிக்கக்கூடாது. கண்டறியப்படாத லேசான கோளாறு இருந்தால், அழுத்தம் வலியைத் தூண்டும்.
உட்கார்ந்து அல்லது நிற்கும் போது சரியான தோரணையை பராமரிக்கவும், இது முதுகெலும்பு மேலும் சுழற்சி அல்லது வளைவைத் தடுக்கலாம்.
ஸ்கோலியோசிஸிற்கான சிகிச்சைகள்:
சிகிச்சை திட்டம் பல காரணிகளைப் பொறுத்தது:
• முதுகெலும்பு வளைவின் அளவு
• உங்கள் வயது
• வளைவு வகை
• ஸ்கோலியோசிஸ் வகை
• மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்பு
முதன்மை சிகிச்சை விருப்பங்களில் பிரேசிங் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும்.
சுழற்சி 25 முதல் 40 டிகிரிக்கு மேல் இருக்கும்போது வளரும் வயதில் வளைவை கட்டுப்படுத்த முடியும். முன்கூட்டியே கண்டறிதல் பிரேஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் வளைவைத் தடுக்கலாம். நீங்கள் நீண்ட காலத்திற்கு பிரேஸ்களை அணிந்தால், அது சிதைவைக் கட்டுப்படுத்தும். இரண்டு வகையான பிரேஸ்கள் உள்ளன:
அக்குள்: பிளாஸ்டிக் மற்றும் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததை உள்ளடக்கிய நெருக்கமான பிரேஸ். இது கீழ் முதுகுத்தண்டு வளைவுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
மில்வாக்கி: பிரேஸ் கழுத்தில் தொடங்கி, கால்கள் மற்றும் கைகளைத் தவிர்த்து, உங்கள் முழு உடற்பகுதியையும் உள்ளடக்கியது.
வளைவு 40 டிகிரிக்கு மேல் இருக்கும் ஸ்கோலியோசிஸுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே சிகிச்சை விருப்பம். முதுகெலும்பு இணைவு என்பது அறுவை சிகிச்சையின் நிலையான வழியாகும். மருத்துவர் இந்த அறுவை சிகிச்சையில் தண்டுகள், திருகுகள் மற்றும் எலும்பு ஒட்டுதல்களைப் பயன்படுத்தி முதுகெலும்புகளை ஒன்றிணைப்பார். எலும்பு ஒட்டுதல்கள் எலும்பு போன்ற பொருள் அல்லது உண்மையான எலும்பைக் கொண்டிருக்கும். தண்டுகள் முதுகெலும்பை நேராக வைத்திருக்கும், மேலும் திருகுகள் முதுகெலும்புகளை வைத்திருக்கும்.
தொடர்புடைய நிபந்தனைகள்:
வளைவு லேசானதாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால், அது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் தலையிடாது. ஆனால் நிலைமை கடுமையானதாக இருக்கும்போது, உடல் வரம்புகள் ஏற்படலாம். வளைவு வயதுக்கு ஏற்ப மோசமடையக்கூடும் என்பதால் நிலையான வலி உங்கள் துணையாக இருக்கும்.
ஸ்கோலியோசிஸுடன் வாழ்வது சவாலானதாக இருக்கலாம் . அதிகரிக்கும் சிதைவு உங்கள் இயக்கத்தை பாதிக்கத் தொடங்கும் போது மன அழுத்தம் அடிக்கடி மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. வலியைச் சமாளித்து, சிறந்த வாழ்க்கையை வாழ உதவும் ஆதரவுக் குழுக்களைத் தேடுவது நல்லது. இதே போன்ற அல்லது மோசமான அறிகுறிகளை அனுபவிக்கும் மற்றவர்களை நீங்கள் சந்திக்கலாம். தினசரி அடிப்படையில் நிலைமையைச் சமாளிக்க இது உங்களை ஊக்குவிக்கும்.
- மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
- மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர்
செலவழித்து மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் பிறந்து 15 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தந்தை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வாழ்ந்து வந்த தாயாப் என்ற நபரின் மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தாயாபிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தந்தை தாயாபை கைது செய்துள்ளனர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்திய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது.
- சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
• வயதிற்கு வந்த இளம் பெண்பிள்ளைகளுக்கு கர்ப்பப்பை வலுப்பெரும்
• கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்
• பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
• உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
• நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன.
• உளுந்து நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது
• உளுந்து களியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது
• உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும்.
• உளுந்து அபரிமிதமான இரும்பு சத்தை கொண்டது. உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் திறனை கொடுக்கும்
• உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும்.
- உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யும்.
- கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது,
• சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூனை மீசை மூலிகை
• இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யும்.
• பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
• பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரம்.
• மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .
• மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது .
• தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .
• சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது.
• கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது,
• சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .
• இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் .
• இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள்.
• தினசரி 2 வேளை பயன்படுத்துவதால் மேற்கண்ட அனைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.
• சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது .
• மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது.
• ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.
• அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .
• தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.
- குடல் இயக்கங்களை மேன்மைபடுத்தி மலத்தை வெளியேற்றும் பணியை சீராக்குகிறது.
- ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை உண்டாக்கும்.
அத்திப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளுக்கு, நோய் எதிர்ப்பு அளிப்பதற்கு, ஆண்மை குறைபாட்டுக்கு, சுவாசப்பிரச்சனைகளுக்கு என பல்வேறு குறைபாட்டுகளுக்கு நன்மை ஏற்படுகிறது.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை குறைக்கவும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தாகவும், குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, எலும்பு, சதை, பல் வழுவானதாகவும் மாற பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் மருந்துகளை நாடாமல் தேனில் ஊறிய அத்திப்பழத்தை எடுத்துகொள்வது நன்மை பயக்கும். குடல் இயக்கங்களை மேன்மைபடுத்தி மலத்தை வெளியேற்றும் பணியை சீராக்குகிறது.
உடலில் இருக்கும் பித்தம், இரல், நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. அத்தித்தேன் கல்லீரல் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் இது இன்சுலின் அளவை மேம்படுத்தகூடும்.
ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை உண்டாக்கும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, இதய நோய்க்கு சிறந்த தீர்வு.
- ஊட்டச்சத்துள்ள உணவு ஊட்டச்சத்து இல்லாத துரித, பொருந்தா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- இரவு தூக்கத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஒரு தம்ளர் பால் அருந்தலாம்.
தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். நாள் முழுவதும் ஓடிய உடலுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும்
சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும்.
சிலர் படுத்தவுடன் தூங்கிவிடுவதெல்லாம் உண்மையில் வரம்தான். சிலர் நாள் முழுவதும் உழைத்துத் களைத்துத் வந்தாலும் தூக்கம் வராது. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
இரவு தூக்கம் வராதவர்கள், மருத்துவ நிபுணர்கள் கூறும் கீழ்குறிப்பிட்ட சில வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்துள்ள உணவு ஊட்டச்சத்து இல்லாத துரித, பொருந்தா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக செரிமானம் கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
குறிப்பாக தூக்கத்திற்கான மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்தும் சிக்கன், முட்டை, கடல் உணவுகள் என புரதம் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பாஸ்தா, ரொட்டிட் , அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.
சிலருக்கு இரவு சாப்பிடாவிட்டால் தூக்கம் வராது என்று கூறுவார்கள். இரவு சாப்பிடாமல் படுப்பது சரியல்லதான். குறைந்த அளவு உணவு எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், சிலர் பசி காரணமாக நள்ளிரவில் எழுந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறு. அதிலும் குறிப்பாக நொறுக்குத் தீனிகளை நள்ளிரவு சாப்பிடக்கூடாது. நள்ளிரவு பசியைக் கட்டுபடுத்த முடியவில்லை என்றால் ஒரு பழம் சாப்பிடலாம். மாறாக, அரிசி உணவுகள், ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உடல் இயக்கத்தை சீர்குர் லைக்கும். இது தூக்கத்தையும் கெடுக்கும்.
சிலர் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர்தான் சாப்பிடுவார்கள். இது செரிமானத்தில் கோளாறை ஏற்படுத்துவதுடன் உடல் பிரச்னைகளை உண்டுபண்ணும். இரவு தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு விட வேண்டும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுபோல இரவில் வயிற்றை முழுவதும் நிரப்பக்கூடாது.
பகல் நேர உணவு அளவில் பாதி சாப்பிடலாம். எளிதாக செரிமானம் அடையும் உணவுகளை சாப்பிடுங்கள். நல்ல தூக்கம் கிடைக்கும்.
டிரிப்டோபன், மெலடோனின் இந்த இரண்டும் பாலில் உள்ள மூலக்கூறுகள். மூளை வெளியிடும் மெ லடோனின், தூக்க ஹார்மோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது, உடலை தூக்கத்திற்கு தயார்படுத்துகிறது. டிரிப்டோபன், மெலடோனின் இரண்டும் நல்ல தூக்கத்திற்கு உதவும். இவை இரண்டும் பாலில் இருப்பதால் இரவு தூக்கத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஒரு தம்ளர் பால் அருந்தலாம்.
பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி ஆகியவை தூக்கத்திற்கு உதவும் உணவுகள். இவற்றில் மெலடோனின், மெக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இரவு உணவிற்கு முன் இந்த உணவுகளை சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
- தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.
- போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு செல்போனிலும், சமூக ஊடகங்களிலும் பொழுதை போக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு 10 மணியை கடந்த பின்பும் செல்போனில் மூழ்குபவர்களும் இருக்கிறார்கள்.
இரவு 11 மணியை தாண்டிய பிறகுதான் தூங்குவது பற்றி சிந்திக்கிறார்கள். அப்படி தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.
தினமும் இரவு 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், தினமும் 7-9 மணி நேரம் தூங்குவதற்கு பரிந்துரைக்கிறது. ஆனால் நிறைய பேர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அது தொடர்ந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?
தூங்கும் நேரம் குறைவது நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கும். இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூக்கத்தின் போது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். குறிப்பாக ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்த சர்க்கரை அளவுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.
''உங்களுக்கு போதுமான தூக்கம் வராதபோது, உங்கள் உடல் அதிக மன அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்துவிடுகிறது. தூக்கத்தின் போது, உங்கள் இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைகிறது. சுவாசம் சீராக நடப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது.
இந்த செயல்முறை இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், அன்றைய நாளின் மன அழுத்தத்தில் இருந்து மீளவும் வழிவகை செய்கிறது. அதேவேளையில் உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காவிட்டாலோ அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நாளடைவில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். இதய அமைப்பை சேதப்படுத்தும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் வழக்கம் தொடர்ந்தால் இதய நோய் அபாயங்களுக்கு மட்டுமின்றி நீரிழிவு நோய்க்கும் வழிவகுத்துவிடும்.