என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர்"
- வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
- துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜிசிகடம், சுதம்பேட்டையை சேர்ந்தவர் அப்பாராவ் (வயது 85). வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவால் அவதி அடைந்து வந்தார்.
அப்பாராவை அவரது உறவினர்கள் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நீண்ட நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அப்பாராவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் டாக்டர்கள் அப்பாராவை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பாராவை அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். வரும் வழியில் அவரது உடல் அசையவில்லை. அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் நினைத்தனர். இது குறித்து வரும் வெளியிலேயே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்தனர்.
அப்பாராவின் உடலை கழுவி சுத்தம் செய்து சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக அவரது உடலை பாடையில் தூக்கி வைத்தனர். அதனை தூக்கி சென்றனர்.
அப்போது அப்பாராவ் திடீரென கண் திறந்து, கால்களை அசைத்தபடி எழுந்து உட்கார்ந்தார்.
இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
- பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 70). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.
அதில், தனது பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெயரில் மடம் இருந்தது. இந்த மடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடத்தை நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்தோம்.
இந்த நிலையில் அந்த மடத்தை 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் வகைமாற்றம் செய்து பெயர்மாற்றம் செய்துள்ளனர். காலப்போக்கில் இதை நான் அறிந்தேன். எனவே எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர், அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு நாகை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதில் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால் ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்த சோழர் கால செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார். இந்த செப்பு பட்டயத்தை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர் அலுவலகத்தில் இருந்த ஆவண குறிப்புகளை வைத்து சோதனை செய்தனர்.
இதில் ராதாகிருஷ்ணன் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக அரங்கநாதன் தீர்ப்பு வழங்கினார்.
இதனையடுத்து உரிய முறையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
- தண்டனையை எதிர்த்து ரசிக் சந்திரா மண்டல் 2018-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்தார்.
- ரசிக் சந்திரா மண்டலை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
புதுடெல்லி:
மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதியை சேர்ந்தவர் ரசிக் சந்திரா மண்டல். இவர் 1988-ம் ஆண்டு தனது 68-வது வயதில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 1994-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து ரசிக் சந்திரா மண்டல் 2018-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்தார். அவரது மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் அவர் மீண்டும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு கடந்த மாதம் 29-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அந்த மனு மீது விசாரணை நடத்தியது.
பின்னர் ரசிக் சந்திரா மண்டலை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் மற்ற கைதிகளுடன் அமைதியாக வாழ்ந்து வந்த அவருக்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து மால்டா சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது ரசிக் சந்திரா மண்டல் தனது மகன் உத்தமியின் கையை பிடித்து நெகிழ்ச்சியுடன் கூறுகையில், நான் வீட்டுக்கு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் சிறை வாழ்க்கையை இழக்கிறேன் என்றார்.
- கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
- குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப் பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரி மலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்க ளான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் அதிகாலை நடை திறக்கப்படும் நேரத்தில் மட்டும் சில மணி நேரம் பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. மற்ற நேரங்களில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்கும் விதமாக, அவர்களுக்கு சிறப்பு வாயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் பதினெட்டாம்படி ஏறிய பிறகு சன்னதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக முதல் வரிசையை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம்.
குழந்தைகள் தங்களின் பெற்றோரில் ஒருவரை தங்களுடன் இந்த வழியில் அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்த சிறப்பு வாயிலை பயன்படுத்தி இன்று ஏராளமான பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்தார்கள்.
- கிருஷ்ணய்யர் வலியால் அலறி துடித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், ஜல்லபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யர். இவரது மனைவி மாதம்மா. தம்பதிக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
மாதாம்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கிருஷ்ணய்யர் இளைய மகனுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இளைய மகனின் மனைவி கிருஷ்ணய்யருக்கு சாதம் பரிமாறினார். பழைய சாதம் என்பதால் குளிர்ச்சியாக இருந்தது. இதனைப் பார்த்த கிருஷ்ணய்யர் மருமகளிடம் சூடான சாப்பாடு வேண்டும் என கூறினார்.
இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மருமகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கணவருக்கும், அவரது அண்ணனுக்கும் போன் செய்து உங்களது தந்தை சூடான சாதம் கேட்கிறார் என தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மகன்கள் இருவரும் தந்தையை கடுமையாக தாக்கினர். கிருஷ்ணய்யர் வலியால் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மகன்களிடமிருந்து கிருஷ்ணய்யரை மிட்டனர்.
மகன்களின் தாக்குதலால் உயிருக்கு பயந்த கிருஷ்ணய்யர் ஜல்லாபுரத்திலிருந்து மணவபாடு வரை 6 கிலோ மீட்டர் நள்ளிரவில் தனியாக நடந்தே வந்தார்.
இரவு முழுவதும் பஸ் நிலையத்தில் தங்கி இருந்த கிருஷ்ணய்யர் நேற்று காலை மணவபாடு போலீஸ் நிலையத்தில் மகன்கள் மீது புகார் செய்தார்.
நிலத்தை விற்று வைத்திருந்த ரூ. 3 லட்சத்தை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடுவதாக கூறிவிட்டு தற்போது தன் மீது தாக்குதல் நடத்துவதாக புகாரில் கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது.
- லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் புளியகுளம் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது. அதில் முதியவர் மருதாசலம் என்பவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
?LIVE : லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை https://t.co/MsblJU9OhO
— Thanthi TV (@ThanthiTV) October 12, 2024
- மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.
- வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர்.
அந்தியூர்:
ஈரோடு ரெயில் நிலையம் அருகே காளை மாட்டு சிலை ரவுண்டானா உள்ளது. இந்த பகுதி ஈரோட்டின் மைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எப்போது பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வழியாக கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பகுதியாக அமைந்துள்ளதால் பஸ்கள், கார், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.
அதே போல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம், கடை வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வானங்கள் பெரும்பாலும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது. கொல்லம் பாளையம், சோலார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் செல்லும் மக்கள் காளை மாட்டு சிலை வழியாக சென்று வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.
மேலும் இந்த ரவுண்டானா பகுதியில் தமிழர்களின் வீர விளையாட்டை குறிக்கக்கூடிய ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் காளை மாட்டை வாலிபர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலை ஈரோட்டின் மையப்பகுதியில் மிகவும் கம்பீரமாக இருந்து வருகிறது. இந்த சிலை ஈரோட்டின் நினைவு சின்னமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் காளை மாட்டை அடக்கும் இந்த சிலையை முதியவர் ஒருவர் கயிறு கட்டி இழுத்து கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் காளையை அடக்குபவரிடம் அவர் பேசுவது போன்றும் அவர் தொடர்ந்து காளை மாட்டு சிலையை கயிறு கட்டி சுற்றி கொண்டே இருந்தார்.
இந்த வீடியோ தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் ஈரோட்டில் இருக்கும் காளை மாட்டின் உரிமையாளர் கிடைத்து விட்டார் என்றது போன்ற பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவில் முதியவர் காளையை அடக்குபவரிடம் பேசுவது போன்றும்காளை மாட்டை அடக்கியதற்கு பாராட்டு தெரிவிப்பது போன்றும் காட்சி பதிவாகியுள்ளது.
அந்த முதியவர் மது போதையில் இருந்தாரா? என தெரியவில்லை. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர். இதையடுத்து அந்த முதியவர் அங்கு இருந்து சென்று விட்டார்.
- பாஜக தலைவர் பிர்பால் சிங் மகன் அபினவ் சிங், வயதான தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது
உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த சிசிடிவி வீடியோவில், முதியவரை மிரட்டும் அபினவ் அவரது கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதனால் அந்த முதியவர் நிலை தடுமாறுகிறார்.
சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. முதிய தம்பதிக்கும் அபினவுக்கும் என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகவில்லை.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது. ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளும் கட்சித் தலைவரின் மகன் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார்.
- அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
புனேவில் ஜெரலின் டி சில்வா என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னே வந்த கார் இவரை முந்தி செல்ல முயற்சித்தது. ஆனால் முந்தி செல்ல முடியாமல் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரின் பின்புறம் கார் சென்றுள்ளது. இதனால் காரை ஓட்டி வந்த முதியவர் கோவமடைந்துள்ளார்.
பின்பு ஸ்கூட்டருக்கு முன்பு காரை நிறுத்தி இறங்கிய முதியவர் கோபத்துடன் அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அப்பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.
பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
வீடியோ வைரலானதை அடுத்து, தாக்கிய முதியவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
- வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
- 'தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது'
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள GT ஷாப்பிங் மாலுக்கு கடந்த செய்வாய்க்கிழமை இரவு வேட்டி கட்டி வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முதியவர் விவசாயி என பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் GT ஷாப்பிங் மாலுக்கு 7 நாட்களுக்கு மூடி சீல் வைக்க கர்நாடக அரசு நேற்று [ஜூலை 18] உத்தரவிட்டுள்ளது. விவசாயிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையை வன்மையாக கண்டிப்பதாகவும் தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு அம்மாநில அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
- லீயை திருமணம் செய்து கொள்வதற்காக ஜியாபாங்க் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.
- ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த ஜியாபாங்க் (23) என்ற பெண், அங்கு லீ என்ற முதியவரை சந்தித்தார். இருவரும் விரைவில் நெருங்கிய நண்பர்களாகினர். இறுதியில் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஜியாபாங்க் குடும்பத்தினர் அவரது உறவை ஏற்கவில்லை என்ற போதிலும், லீயை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.
சமீபத்தில் லீ-ஜியாபாங்க் ஜோடி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். லீயுடன் எதுவும் சாத்தியம் என்று அவர் கூறி உள்ளார்.
லீயின் முதிர்ச்சி, நிலைப்புத்தன்மை மற்றும் ஞானம் ஆகியவற்றால் அந்த பெண் ஈர்க்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
- ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.
- தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள சிப்ரி பஜார் பகுதியில் ஒரு முதியவர் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சிப்ரி பஜாரில் சற்று நெரிசலான ஒரு குறுகிய தெருவில் இருபுறமும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வெள்ளை நிற கார் திரும்புவதைக் காட்டுகிறது. ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.
முதியவர் வலியால் அலறியபோது 70 வயது முதியவரை சில மீட்டர்கள் இழுத்துச் சென்ற SUV டிரைவர் சக்கரங்களுக்கு அடியில் இருப்பது தெரியாமல் வாகனத்தை பின்னுக்குத் தள்ளினார். பின்னர் அந்த காரின் சக்கரம் அவர் மீது ஏறி நின்றது.
பின்னர், அந்த நபர் தொடர்ந்து கத்தியதால், சத்தம் கேட்டு மக்கள் SUVயை நோக்கி ஓடி வந்து காருக்கு அடியில் இருந்த முதியவரை மீட்டனர். அதை தொடர்ந்து ஓட்டுநரும் கீழே இறங்கினார். அதிக எடையுள்ள SUVயால் அந்த நபருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அடிப்பட்ட முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஒருவரின் உயிருக்கு ஆபத்து மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sensitive Video?
— Voice of Assam (@VoiceOfAxom) May 24, 2024
Shocking Incident in Jhansi | SUV Mows Down Man Twice, Disturbing CCTV Footage Emerges.
FIR Lodged, Manhunt Is On For The Driver. #ViralVideo #Jhansi #SUV pic.twitter.com/efCd3Q8HOJ