search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவத் தளபதி"

    • அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
    • வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் இன்று வரை இருவரும் தொடர்பிலேயே உள்ளனர்

    இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். ராணுவ துணை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் திவேதி நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார்.

     

    இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பதவியேற்று தற்போது இந்திய கடற்படை தளபதியாக இருந்துவரும் தினேஷ் திரிபாதியும் இந்திய ராணுவத் தலைமைத் உபேந்திரா திவேதியும் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

     

    இந்திய வரலாற்றிலேயே ஒரே வகுப்பில் படித்த இருவர் ஒரே நேரத்தில் ராணுவத் தளபதியாகவும் , கடற்படைத் தளபதியாகவும் உள்ளது இதுவே முதல் முறை ஆகும். மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியில் இருவரும் 1970களில் ஆண்டு ஐந்தாம் வகுப்பு A பிரிவில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். ராணுவத் தளபதி உபேந்திராவின் ரோல் நம்பர் 931 ஆகவும், கடற்படைத்  தளபதி தினேஷ் திரிபாதியின் ரோல் நம்பர் 938 ஆகவும் இருந்துள்ளது.

     

    அதன்பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் இன்று வரை இருவரும் தொடர்பிலேயே உள்ளனர். தற்போது இருவரும் நாட்டின் முக்கியமான இரண்டு பொறுப்புகளில் உள்ளது ராணுவப்படைக்கும், கப்பற்படைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். மேலும் இருவரின் முன்னேற்றம் குறித்து ரேவா சைனிக் பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். 

    ×