search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர் கைது"

    ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் இன்றிரவு ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். #Mahanadibridge #7deadinCuttack #Cuttackbusaccident #Odishabusaccident
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற ஒரு பேருந்து இன்றிரவு  ஜகத்பூர் அருகே மஹாநதி ஆற்றுப்பாலத்தின் வழியாக வந்தபோது பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.



    இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். #7dead  #Mahanadibridge #7deadinCuttack #Cuttackbusaccident #Odishabusaccident
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 7 பேரை அடிப்படை பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக முத்தரசன் அறிவித்துள்ளார். #Mutharasan
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்தும், கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தி வந்த வடலூர் கலியமூர்த்தி, கோடங்குடி கிளையைச் சேர்ந்த சுப்பிரமணியன், அம்பிகா, நிதிநத்தம் உலக நாதன், வதிட்டபுரம் முருகையன், தொளார் நாராயண சாமி, ராமச்சந்திரன் (காட்டு மன்னார்கோவில்) ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேற்கண்ட நபர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்தவிதமான அரசியல், அமைப்புநிலை உறவுமில்லை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #CPI #Mutharasan
    கஜா புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பாம்பன் - கடலூர் இடையே புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
    சென்னை:

    வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கடந்த 3 நாட்களாக மிரட்டிக் கொண்டு இருக்கிறது.

    முதலில் வடதமிழகத்தில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்ததால் மத்திய தமிழகத்தை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 11.30 மணிக்கு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 450 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.

    இந்தப் புயல் 38 கி.மீ. அகலத்தில் 200 கி.மீ. முதல் 300 கி.மீ. பரப்பளவில் நீள் வட்டத்தில் பரவியுள்ளது. நேற்று இரவு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த கஜா புயல் இன்று தீவிர புயலாக மாறி வேகம் எடுத்தது.

    காலையில் 14 கி.மீ. வேகத்திலும் 11 மணி அளவில் 23 கி.மீ. வேகத்திலும் நகர்ந்தது. மதியம் 12 மணி அளவில் 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் திடீரென்று 17 கி.மீ. வேகமாக குறைந்தது.

    இன்று மதியம் 12 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 284 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 245 கி.மீ. தொலைவிலும் கரையை நெருங்கி வந்துள்ளது.

    இன்று மாலை கரையை மேலும் நெருங்கி இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கடலூர்-பாம்பன் இடையே நாகை அருகே புயலாக கரையை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தீவிர புயலாக மாறியதால் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும். நாளை காலைதான் புயல் கரையை முழுமையாக கடந்து செல்லும்.

    எனவே இரவு தொடங்கி நாளை காலை வரை கடலோர பகுதியில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் சூறைகாற்றுடன் மிக பலத்த மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுச்சேரி தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வரை தமிழகத்தின் 7 மாவட்டங்களையும், காரைக்கால் பகுதியையும் புயல் தாக்கும் என்றும் இன்று காலை முதல் மிக கன மழை பெய்யத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கினாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கடல் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    நாளை புயல் தாக்கும் 7 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மிதமிஞ்சிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் போதும் கரையை கடந்த பின்பும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும். இந்த 7 மாவட்டங்களிலும் சேதம் கடுமையாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

    நாகை, வேதாரண்யம் ஆகிய ஊர்கள் புயல் தாக்கும் மையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகள் ஆக்ரோ‌ஷமாக எழும்புவதால் நீர் மட்டம் ஒரு மீட்டர் வரை உயரவும் வாய்ப்பு உள்ளது.

    இதனால் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஏராளமான புயல் நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதிகள் செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    புயல் கரையை கடக்கும் மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் 20 செ.மீ. வரை அதிக அளவு மழை கொட்டும் வாய்ப்புள்ளது. இதையடுத்து 7 மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

    மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை எண் 1070-லும், 32 மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை எண் 1077-லும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    கஜா புயலையொட்டி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ராமேசுவரம்- மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்- ஏக்கா (குஜராத்) செல்லும் ரெயில்கள் ராமேசுவரம்- மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எண்ணூர், கடலூர், புதுவை, காரைக்கால், நாகை, பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்த பின்பு நாளை திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். அதன் பிறகு 17-ந்தேதி கேரளா வழியாக அரபிக்கடலை அடைந்து புயலாக நீடிக்கும்.

    அதன்பிறகு படிப்படியாக வலு இழக்கும் என்று தன்னார்வ வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். #CycloneGaja #TNRains
    கஜா புயல் நாளை கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
    சென்னை:

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும்  நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றின் அமைப்பைப் பொருத்து புயலின் வேகம் இருக்கும். நாளை மாலை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.



    அப்போது, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CycloneGaja #TNRains
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan #Rajinikanth #BJP
    சென்னை:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை.



    செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்காததால் இன்னொரு முறை கேட்டால் நன்றாக இருக்கும். மீண்டும் ஒருமுறை கேள்விகளை கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றிய கேள்விக்கு ‘எந்த 7 பேர்’ என ரஜினிகாந்த் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TamilisaiSoundararajan #Rajinikanth #BJP
    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #Diwali
    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த குமாரசாமி (வயது 24), இடலாக்குடியைச் சேர்ந்த முபாரக் (26), ஆரல்வாய்மொழி அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த முருகன் (42), ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் (40), சுசீந்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), பிச்சைமணி (50), ராஜாக் கமங்கலத்தைச் சேர்ந்த லிங்கராஜ் (61) ஆகியோர் கைதானார்கள்.

    நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக அரவிந்த் (21), கன்னியாகுமரியில் பாலபிரசாத் (35), வடசேரியில் சிவா (28), செல்வம் (48), ரமேஷ் (27), சுகிஷ் (24), முகிலன் குடியிருப்பில் ஏசுமணி (63) என்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தக்கலை கேரளபுரத்தில் தங்கராஜ் (62), பிரசாத் (28), சிவசதா (37), அஞ்சுகிராமத்தில் செல்வம் (45), பிரபு (35), ஆனந்த் (24), மணிகண்டன் (25), ஈத்தாமொழியில் விஜய் (22), மார்த்தாண்டம் திக்குறிச்சியில் அனிஷ் (23), சந்திரசேகர் (36), ராஜாக்கமங் கலத்தில் நாகலிங்ம் (23) உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கோழிப் போர்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜகுமார் (45) என்பவரை கைது செய்தனர். இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் மயிலோடு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜு என்பவரை கைது செய்தனர். #tamilnews
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. #RajivGandhiAssassinationCase #Governor
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், அதே ஆண்டு ஜூன் 11-ந் தேதி பேரறிவாளனும், ஜூன் 14-ந்தேதி நளினியும், அவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகனும், ஜூலை 22-ந்தேதி சுரேந்திர ராஜா என்ற சாந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 1998-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து அனைவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், 1999-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரின் தூக்குத் தண்டனை மட்டும் உறுதி செய்யப்பட்டது. ஏனைய 19 பேரும் தண்டனை காலத்தை முடித்து விட்டதாக கூறி விடுதலை செய்யப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    இந்தநிலையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரும் 1999-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி கவர்னருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அப்போது, கவர்னராக இருந்த பாத்திமா பீவி இந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். கவர்னரின் முடிவை எதிர்த்து 4 பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    அதே ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி கவர்னரின் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்டு அமைச்சரவை முடிவின் மீதே கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது. இந்தநிலையில், 2000-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நளினியின் தூக்குத் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்க கவர்னருக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 24-ந் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசாணையில், நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 2000-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனும், 2007-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமும் இந்த கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். 2011-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் ஆகஸ்டு 12-ந் தேதி அந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

    இந்த நிலையில், 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 பேர் அமர்வு, பல ஆண்டு காலம் 3 பேரின் கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது.



    பிப்ரவரி 19-ந்தேதி தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி, ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். “குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத்துறை விசாரித்திருந்தால், மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும் 3 நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள்” என்றும் ஜெயலலிதா கூறினார்.

    தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்த மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு மூலம் 7 பேரையும் 3 நாட்களுக்குள் விடுவிப்பதை தடுத்து நிறுத்தி தடையாணையும் பெற்றது. அதற்கு காரணமாக, சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியது.

    இந்த வழக்கில், மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி, இந்த வழக்கு விசாரணை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி தீர்ப்பளித்த 5 பேர் அமர்வு, “சி.பி.ஐ. விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது” என்று கூறியது.

    ஆனால், தமிழக அரசு 161-வது சட்டப் பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியது. இந்த கருத்துகளின் அடிப்படையில் வழக்கை தீர்மானிக்க, 3 பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், 2016-ம் ஆண்டு மார்ச் 2-ந்தேதி, 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.

    இந்த ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி, 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என ரஞ்சன் கோகய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    உடனடியாக, இந்த தீர்மானம் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், 7 பேர் தொடர்பான கோப்புகளையும் செப்டம்பர் 11-ந் தேதி கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதற்கிடையே, தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இந்த நிலையில், செப்டம்பர் 13-ந்தேதி இந்த விஷயம் தொடர்பாக மத்திய உள்துறைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.

    ஆனால், சுமார் 50 நாட்கள் ஆன நிலையிலும், இந்த விவகாரத்தில் உண்மை நிலை வெளிவராமல் இருந்து வந்தது. தற்போது, அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது, தமிழக அரசிடம் இருந்து தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் சிறையில் உள்ள 3 பேரை விடுதலை செய்வது குறித்தும், ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்தும் பரிந்துரைக்கு சென்றுள்ளது.

    இதுகுறித்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்படி, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் சிறையில் உள்ள 3 பேரை விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று அந்தப் பரிந்துரையை நிராகரித்துவிட்டார். ஆனால், 7 பேரை விடுவிப்பதில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

    ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது, அவருடன் பலர் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    எனவே, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தாம் எந்தவித முடிவும் எடுக்க முடியாது என்பதால்தான், கவர்னர் பன்வாரிலால் புரோகித் 7 பேர் விடுதலை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மீது முடிவு தெரிந்த பிறகே கவர்னரும் தனது முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது. #RajivGandhiAssassinationCase #Governor


    புதுவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணம்-செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று இரவு சோனாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் வந்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு ஆனந்த் (வயது 46) என்பவர் வீட்டில் சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆனந்த், வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (51), அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), வெங்கட்டா நகரை சேர்ந்த மூர்த்தி (38), உருளையன்பேட்டையை சேர்ந்த ரெஜிஸ் (39), வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த மணிராஜா (58) மற்றும் எல்லைப்பிள்ளைச் சாவவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பது தெரிய வந்தது.

    போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 செல்போன் மற்றும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரான் எல்லைப்பகுதியில் இருந்து பெட்ரோல் கடத்திச் சென்ற வேன் மீது இன்று லாரி மோதிய விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். #Accident
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியையொட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் வசிப்பவர்கள் ஈரான் எண்ணெய் கிணறுகளில் இருந்து குறைந்த விலைக்கு பெட்ரோல் வாங்கி கள்ளத்தனமாக பாகிஸ்தானில் உள்ள பிறபகுதிகளுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

    அவ்வகையில், பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டா நகரில் இருந்து சிபி என்ற இடத்தை நோக்கி கடத்தல் பெட்ரோல் ஏற்றிச் சென்ற ஒரு வேன் இன்று மாச் என்ற பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே வேகமாக வந்த லாரி மீது மோதியது.



    மோதிய வேகத்தில் அந்த வேன் தீபிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் சம்பவ இடத்திலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். #Accident

    அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு பேருந்து நல்பாரி மாவட்டத்தில் இன்று குட்டைக்குள் பாய்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். #AssamBusAccident
    கவுகாத்தி:

    அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் அம்மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது.

    மாலை 3.30 மணியளவில் நல்பாரி மாவட்டத்தின் வழியாக சென்றபோது அடபாரி என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்தது.



    இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குட்டைக்குள் மூழ்கிய மேலும் சிலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #AssamBusAccident
    ஒடிசாவில் டிட்லி புயலில் சிக்கி பலியான 7 வயது மகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தந்தை 8 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TitliCyclone
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் கடந்த 11-ந்தேதி டிட்லி புயல் கடுமையாக தாக்கியது. கஜபதி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. லட்சுமிபூர் பஞ்சாயத்தில் உள்ள கதாங்பூர் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் அதாங்பூர் கிராமத்தை சேர்ந்த முகுந்த் டோரா என்பவரது 7 வயது மகள் பபிதாவை காணவில்லை. எனவே அவளை அவர் தேடி வந்தார். இந்த நிலையில் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அவளது உடல் சமீபத்தில் மீட்கப்பட்டது.

    அவளது உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்சை போலீசார் ஏற்பாடு செய்யவில்லை. புயல் மற்றும் நிலச்சரிவினால் சாலை சேதமடைந்துள்ளது. அதை காரணம் காட்டி பிரேத பரிசோதனைக்காக இறந்த பபிதாவின் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரும்படி தெரிவித்தனர்.

    ஏழையான முகுந்த் டோராவினால் ஆம்புலன்சோ, வேறு வாகனமோ ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே மகளின் பிணத்தை ஒரு சாக்குப் பையில் போட்டு கட்டி தோளில் சுமந்தபடி 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

    வழியில் லட்சமிபூரில் அவரை வழிமறித்து நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது இந்த தகவலை அவர் தெரிவித்தார். அதன் பின்னர் போலீசார் ஒரு ஆட்டோவை பிடித்து அதன் மூலம் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    இந்த தகவல் கஜபதி மாவட்ட கலெக்டர் அனுபம் ஷாவுக்கு தெரிய வந்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த அவர் இது குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக கூறினார். மேலும் புயல் மழையால் உயிரிழந்த பபிதாவுக்காக அவரது தந்தை டோராவிடம் ரூ.10 லட்சம் காசோலையையும் அவர் வழங்கினார்.

    மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதான் ஒடிசாவில் புயல் பாதித்த கஜபதி மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, அவரிடம் தனது மகள் உடலை 8 கி.மீ. தூரம் சுமந்து சென்ற தந்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இச்சம்பவம் வேனை அளிக்கிறது என்றார்.

    கடந்த 2016-ம் ஆண்டு ஒடிசா அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் தரவில்லை. எனவே ஏழை மலைவாழ் மனிதர் தனமாஜி தனது மனைவியின் உடலை 10 கி.மீ. தூரம் சுமந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். #TitliCyclone
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். #FireinMall
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் பர்ஹான்புர் பகுதியில் அமைந்துள்ளது பகிசா வணிக வளாகம். நேற்று இரவு அந்த வணிக வளாகத்தில் பலர் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. அந்த தீ மளமளவென பரவியது. இந்த தீவிபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். 



    தகவலறிந்து அங்கு 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு படைவீரர்கள் சென்றனர். அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை போராடி அணைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ம.பி.யில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சற்று பரபரப்பு ஏற்பட்டது #FireinMall
    ×