search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்களர் பட்டியல்"

    • 5 சட்டமன்ற தொகுதியில் 12 லட்சத்து 68,108 வாக்காளர்கள் உள்ளனர்
    • 9,787 பேர் புதிதாக சேர்ப்பு; 35,127 பேர் நீக்கம்

    வேலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் 2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று வெளியிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். வழக்கம் போல் பெண் வாக்காளர்களே அதிகம். வேலூர் மாவட்டத்தில் 153 மூன்றாம் பாலினத்தவர் இடம் பெற்றுள்ளனர்

    வேலூர் மாவட்டத்தில் 9,787 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரு முறை பதிவு, இடமாறுதல் உள்ளிட்ட காரணங்களால் 35,127 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 13 ஆயிரத்தி 707 ஆண் வாக்காளர்களும் 6 லட்சத்து 54 ஆயிரத்து 248 பெண் வாக்காளர்களும் 153 மூன்றாம் பாலினத்தவர் என 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    காட்பாடி தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்தது 128 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 594 பெண் வாக்காளர்களும் 34 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 44 ஆயிரத்து 756 பேர் உள்ளனர்.

    வேலூர் தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்தி 822 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 491 பெண் வாக்காளர்கள் 37 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 53 ஆயிரத்து 350 பேர் உள்ளனர்.

    அணைக்கட்டு தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்தி 713 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்கள் 31 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 55 ஆயிரத்து 177 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    கீழ்வைத்தினான் குப்பம் (கே.வி.குப்பம்) (தனி) தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்தி 658 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 595 பெண் வாக்காளர்கள் 8 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 26 ஆயிரத்து 261 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    குடியாத்தம் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்தி 386 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 135 பெண் வாக்காளர்கள் 43 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 88 ஆயிரத்து 564 பேர் உள்ளனர்.

    மேலும் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 652 இடங்களில் உள்ள 1300 வாக்குச்சாவடி மையங்களிலும் மாநகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள். வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், என மொத்தம்

    666 இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாக்காளர் பட்டியல் இன்று முதல் 08-12-2022 வரை ஒரு மாத காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

    வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்றவற்றை இணையதளம் வாயிலாகவும் பட்டியலில் சேர்க்க நீக்கவும் செய்யலாம். அத்துடன் நவம்பர்12,13,26 மற்றும் 27 ஆகிய 4 விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

    மாவட்டத்திலுள்ள பொதுமக்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெ ற்றுள்ளதா என சரிபார்த்து,

    பெயர் சேர்க்க படிவம் 6A, ஆதார் என் சேர்க்க படிவம் 6 பி பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7,திருத்தம் செய்ய படிவம் 8,முகவரி மாற்றம் செய்ய படிவம் 8A ஆகியவற்றின் விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    ×