என் மலர்
நீங்கள் தேடியது "விண்வெளி"
- நேற்று இரவு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.
- விண்கல்லானது ரஷியாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது .
சூரிய மண்டலத்தில் சிறுகோள்கள் என அழைக்கப்படும் விண்கற்கள் சுற்றி வருகின்றன. இந்த விண்கற்கள் அடிக்கடி, புவி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவதுண்டு. இவை பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே அழிந்து போகின்றன.
இந்த நிலையில் விண்கல் ஒன்று நேற்று புவி வட்டப்பாதைக்குள் வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 70 செ.மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் நள்ளிரவு வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்றும் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி அந்த விண்கல் நேற்று இரவு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. கண்டுபிடிக்கப்பட்ட 12 மணி நேரத்துக்கு பிறகு அந்த விண்கல்லானது ரஷியாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது.
பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், விண்கல் பல துண்டுகளாக சிதைந்து அங்குள்ள வனப்பகுதியில் தீப்பிழம்பாக சிதறி விழுந்தது. இதுதொடர்பான பிரம்மிப்பூட்டும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.
??...and in case this week hasn't been eventful enough for you, here is an meteorite landing in Yakutia.#Russia #Yakutia #Meteor pic.twitter.com/Lp2xTR4dJI
— FH Operador (@fh_operador) December 3, 2024
#Asteriod #Russia #NASA #SouthKorea #martiallaw #Pushpa2TheRule Asteroid of 70 cm falls on earth Russia pic.twitter.com/YaWORxZC9k
— Bijender Singh ????? (@BijenderSingh04) December 3, 2024
Asteroid #C0WECP5 hit Siberia today ?☄️?Северный край pic.twitter.com/oiP1swEaZH
— Milky Way (@PanatpongJ) December 3, 2024
அதிர்ஷ்டவசமாக விண்கல்லின் அளவு மற்றும் அது விழுந்த இடம் காரணமாக பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விண்கல் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஒரு தீப்பந்து போல காட்சியளித்துவிட்டு சென்றுவிடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடுகிறேன்.
- எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட இந்திய பண்டிகைகளைப் பற்றி கூறுவார்
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி [வியாழக்கிழமை] வர உள்ள நிலையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை மனநிலை அனைவரையும் குதூகலப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உலகம் மட்டும் அள்ளாது தற்போது விண்வெளியிலிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்துள்ளது. நாசாவின் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசியுள்ள வாழ்த்து வீடியோவில், வெள்ளை மாளிகையிலும் உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த வருடம் பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட பிற இந்திய பண்டிகைகளைப் பற்றி எடுத்துரைத்து இந்திய கலாச்சாரத்தோடு என்னை நெருக்கத்தில் வைத்திருந்தார். எனவே விண்வெளியில் இருப்பினும் தீபாவளியின் முக்கியத்துவத்தை உணர்வதாகப் பேசியுள்ளார்.
#WATCH | Washington DC | White House Diwali Celebrations | NASA Astronaut Sunita Williams shares a video message on Diwali from the International Space Station. She says, "Greetings from the ISS. I want to extend my warmest wishes for a Happy Diwali to everyone celebrating… pic.twitter.com/YEv3wNAxW9
— ANI (@ANI) October 28, 2024
நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதமே அவர் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
- பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும்.
- நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.
பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் [33 அடி] உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது. இந்த சிறு கோள் ஆனது 2024 செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.
இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும். ஆனால் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும்.
Newly-discovered #asteroid 2024 PT5 is about to undergo a "mini-moon event" when its geocentric energy becomes negative from September 29 - November 25.https://t.co/sAo1qSRu3J pic.twitter.com/pVYAmSbkCF
— Tony Dunn (@tony873004) September 10, 2024
மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம். ஆனால் இந்த காலகட்டத்தில் பூமிக்கும் பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுமான உறவை ஆய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் என்றும் என்றும் புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எவ்வாறாக ரியாக்ட் செய்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நிகழ்வு உதவும் என அமெரிக்கன் ஆஸ்ட்ரோனாமிகள் சொசைட்டி விஞ்ஞானிகள் தெரிவிகிண்டனர். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது, குறிப்பிடத்தக்கது.
- ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது.
இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி தனது 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதற்கு முன்பு, கடந்த 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் [TESS] என்ற தொலைநோக்கி மூலம் இதை கண்டுபிடித்துள்ளனர்.
- சூரியனின் எடையில் 26 சதவீதம் உள்ள Gliese 12b கிரகத்தில் 42° செல்ஸியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது.
பூமியைப் போல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மைகளைக் கொண்ட வெளிப்புற கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனைச் சுற்றும் கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதுபோல கூறிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றும் கண்டுபிடிக்கப்படும் கிரகங்கள் வெளிப்புற கோள்கள் [எக்ஸோபிளானட்ஸ்] என்று அழைக்கப்டுகின்றன. இதுவரை இதுபோல 5,600 வெளிக்கோள்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நட்சத்திர மண்டலத்தில் 40 ஒளியாண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழ்வதற்கான தன்மைகளைக் கொண்ட புதிய வெளிப்புறக் கிரகத்தை நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் [TESS] என்ற தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோளுக்கு Gliese 12b என்று பெயரிடப்பட்டுள்ளது.
டுவார்ப் விண்மீனை ஒருமுறை சுற்றிவர இந்த கிரகம் 12.8 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி மற்றும் வீனஸ் [வெள்ளி] ஆகிய கிரங்களின் எடைகளுக்கு இடைப்பட்ட எடையில் உள்ள Gliese 12b கிரகத்தில் திரவ நீர் இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் எடையில் 26 சதவீதம் உள்ள Gliese 12b கிரகத்தில் 42° செல்ஸியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது. திரவ நீர் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் ஆகியவை ஒருங்கே அமைந்த இந்த புதிய கிரகம் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
- மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண்மீன் திரள்கள் சூழ்ந்த இவ்வகையாக ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த குறிப்பிட்ட குவாசர் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் [ESO] VLT எனப்படும் மிகப்பெரிய தோலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண்மீன் திரள்கள் சூழ்ந்த இவ்வகையாக ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மத்தியில் உள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்டுகிறது. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் அண்டும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதுவே அதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளது. இந்த நிலையில்தான் இதுவரை கண்டறியப்படாத பிரகாசமான குவாசர் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட குவாசர் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த குவாசர் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்தின் அளவை உணர்த்தும்.
- இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது
விண்வெளி அறிவியலில் கோலோச்சும் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. நிலவில் முதல் முறையாகக் கால்பதித்து முதல் விண்வெளி ரகசியங்களை அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வெளிக்கொணரும் நாசாவில் விஞ்ஞானியாக, விண்வெளி வீரராக வேலை பார்ப்பது என்பது சிறுவயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டது பலரது விருப்பமாக இருக்கும். அதிலும் விண்வெளி வீரர் வேலை என்பது மிகவும் துணிச்சல் மற்றும் கடின உழைப்பைப் கோரும் வேலையாக உள்ளது.
கல்பனா சாவ்லா தொடங்கி சுனிதா வில்லியம்ஸ் வரை இந்தியர்களும் நாசாவில் முக்கிய பங்காற்றி உள்ளனர். பூமிக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்திருக்கக் கூடும். அந்த வகையில் நாசா அமைப்பின் இணையத்தில் உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 1.27 கோடி ரூபாய் [$152,258] சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது விண்வெளி வீரர்களுக்கு சுமார் 10 லட்சத்துக்கு 58 ஆயிரம் ரூபாய் மாத சம்பளமாகக் கிடைக்கிறது. ரேங்க் படிநிலையை பொறுத்து இந்த தொகை மாறுபடும். மேலும் இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 4 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- மணிநேரத்துக்குச் சராசரியாக1 மில்லயன் மைல் [16,09,344 kmph] வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது.
- இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ வகைப்படுத்த முடியவில்லை.
ஆகாயத்தில் நிறைந்துள்ள அதிசயங்கள் பெரும்பாலானவை இன்னும் கண்டறியப் படாமலேயே இருந்து வருகிறது. காலங்காலமாக மனிதர்கள் விண்வெளியின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் தீரா வேட்கையுடன் செயலாற்றி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி அந்த தேடுதலுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.
அந்த வகையில் உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக1 மில்லயன் மைல் [16,09,344 kmph] வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது. பால் வெளியை வீட்டு இந்த பொருளானது 1 மில்லயன் மைல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது.
பிளான்ட் 9 என்று திட்டத்தின்கீழ் நடந்த ஆய்வில் இந்த பொருளானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளுக்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.ஆகாயத்தை இன்பிராரெட் ஒளியின் வழியாக ஆராய்ந்த இந்த மர்ம பொருள் விஞ்ஞானிகள் கவனத்துக்கு வந்துள்ளது.
இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ உறுதியாக வகைப்படுத்த முடியவில்லை. இந்த பொருளின் மையத்தில் ஹட்ரஜன் காணப்படவில்லை. எனவே இதை வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வரையறைக்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என்பர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- முதல நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
- ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம் பூமியோடு நின்றுவிடாமல் விண்வெளியிலும் அரங்கேறுகிள்ளது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் இரவு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று அதிகாலை ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் பாரிஸ் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் போட்டிகளுடன் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.
அந்த வகையில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம் பூமியோடு நின்றுவிடாமல் விண்வெளியிலும் அரங்கேறுகிள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 6 விண்வெளி வீரர்கள் மினி ஒலிம்பிக் தீப்பந்த ஜோதி போன்ற பொம்மையை ஏந்தியும் பளு தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விலையுவது போன்றும் அவர்கள் பாவனை செய்து மகிழும் 2 நிமிட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவர் என்று திட்டமிடப்பட்ட நிலையில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக பூமி திருப்ப முடியாமல் அவர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து உள்ளது.
- விண்மீன் திரள்கள் ஒன்றிணைக்கும் செயல்பாட்டில் உள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, கடந்த 2021-ம் ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.
இந்த தொலைநோக்கி விண்வெளியில் இருந்து அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கு உதவி இருக்கிறது.
இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் படங்கள் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நாசா புதிய படத்தை வெளியிட்டு உள்ளது. இரண்டு விண்மீன் திரள்கள் இணையும் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
பெங்குயின் மற்றும் எக் என அழைக்கப்படும் விண்மீன் திரள்கள் 326 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஹைட்ரா விண்மீன் தொகுப்பில் அமைந்து உள்ளன. இந்த விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து உள்ளது.
இதுகுறித்து நாசா விஞ்ஞானி ஜேன் ரிக்பி கூறும்போது,ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தில் நாம் இரண்டு விண்மீன் திரள்களைக் காண்கிறோம், ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும்.
விண்மீன் திரள்கள் ஒன்றிணைக்கும் செயல்பாட்டில் உள்ளன. சிறிய விண்மீன் திரள்களில் இருந்து வளர இதுபோன்ற நிகழ்வு பொதுவானதாகும் என்றார்.
நாசா தலைமையக வானியற்பியல் பிரிவு இயக்குனர் மார்க் கிளம்பின் கூறும்போது, இந்த பணி இதுவரை கவனிக்கப்படாத மிக தொலைதூர விண்மீன் திரள்களைத் திரும்பிப் பார்க்கவும், ஆரம்பகால பிரபஞ்சத்தை புதிய வழியில் புரிந்துகொள்ளவும் உதவும். இந்த ஆரம்பகால விண்மீன் திரள்கள் நாம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரியதாகவும் பிரகாசமாகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம் என்றார்.
- பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாததை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
- விண்வெளி செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளது என்றார் இஸ்ரோ தலைவர்.
புதுடெல்லி:
இந்தியாவின் சார்பில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான சோதனைகள் ஏறத்தாழ அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்திய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, விண்வெளிக்குச் செல்லும் வீரர்களையும் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
இதற்கிடையே, மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே பல மாதமாக நீடித்து வரும் மோதல் போக்கால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அங்கு செல்லாததை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடிக்கு பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், ககன்யான் விண்வெளித் திட்டத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் தலைவரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் என்பது, நாம் அனைவரும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று என தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த செய்தியை தனது எக்ஸ் வலைத்தளத்தில் டேக் செய்தார். மேலும், விண்வெளி செல்வதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்லவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு தயாராகி வருகிறது.
- பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.
விண்வெளித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு தயாராகி வருகிறது. ககன்யான் திட்டத்தின்கீழ் அடுத்த வருட இறுதியில் முதல் சோதனை பயணம் நடப்பட்ட உள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திட்டம் குறித்த சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவில் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள் குறைவு என்பதால் முதலில் விண்வெளிக்கு யாரை அனுப்புவது என்ற சிக்கல் உள்ளது. முதல் முறையாக செய்யப்படும் சோதனை பயணம் என்பதால் வெறும் ஆர்வம் மட்டுமே உள்ளவர்களை விஐபிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியாது. முழுவதுமாக பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே விஐபிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியும். எனவே இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்று சோம்நாத் தெரிவித்தார்.
அப்போது அவரிடம், பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் நான் மட்டும் அல்ல இந்திய நாடே பெருமை கொள்ளும். அது மிகவும் சிறந்த தருணமாக இருக்கும். ஆனால் முழுமையாகி பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் அடுத்த வருடம் இறுதியில் நடக்கும் முதல் ககன்யான் சோதனை பயணத்தை மேற்கொள்ள பிரஷாந்த் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்சு சுக்லா ஆகிய விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தத்க்கது.