search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    விண்வெளியில் இருந்து வந்த தீபாவளி வாழ்த்து.. தந்தையை நினைவுகூர்ந்த சுனிதா வில்லியம்ஸ் - வீடியோ
    X

    விண்வெளியில் இருந்து வந்த தீபாவளி வாழ்த்து.. தந்தையை நினைவுகூர்ந்த சுனிதா வில்லியம்ஸ் - வீடியோ

    • பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடுகிறேன்.
    • எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட இந்திய பண்டிகைகளைப் பற்றி கூறுவார்

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி [வியாழக்கிழமை] வர உள்ள நிலையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை மனநிலை அனைவரையும் குதூகலப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் உலகம் மட்டும் அள்ளாது தற்போது விண்வெளியிலிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்துள்ளது. நாசாவின் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் பேசியுள்ள வாழ்த்து வீடியோவில், வெள்ளை மாளிகையிலும் உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த வருடம் பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட பிற இந்திய பண்டிகைகளைப் பற்றி எடுத்துரைத்து இந்திய கலாச்சாரத்தோடு என்னை நெருக்கத்தில் வைத்திருந்தார். எனவே விண்வெளியில் இருப்பினும் தீபாவளியின் முக்கியத்துவத்தை உணர்வதாகப் பேசியுள்ளார்.

    நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதமே அவர் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    Next Story
    ×