என் மலர்
- வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
- தி சாத்தானிக் வெர்சஸ் நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நியூயார்க்:
இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த 2022, ஆகஸ்ட் 12-ம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடவுகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது மேடையில் ஏறிய ஹாடி மாத்தர் சல்மான் ருஷ்டியை 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.
இந்தத் தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது. ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1988-ம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என கூறப்படுகிறது.
இந்நிலையில், குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.
- பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம்.
- எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது.
திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் ஆபரேசன் சிந்தூர் வெற்றிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, " பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது.
நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது."
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், பேரணி குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்றைய மாலை திருப்பூரில், பெகல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக, நமது ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பெருவெற்றி பெற்றதைப் பாராட்டும் விதமாகவும், நாட்டைக் காக்கும் பணியில், தங்கள் உயிரைத் தியாகம் செய்த நமது ஐந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்,
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில், திருப்பூர் குமரன் சிலை முதல் மகாத்மா காந்தி சிலை வரை, தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நமது மக்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.
அதன்படியே, நமது வீரம் மிகுந்த ராணுவம், விமானப்படை மூலம், பாகிஸ்தான் நாட்டிற்குள்ளே இருந்த தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை எல்லாம் தாக்கி அழித்திருக்கிறது.
இந்த ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாட, கட்சி வேறுபாடின்றி, பெருமளவில் பொதுமக்கள் கூடி, நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
- இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி காந்த் கேரளாவுக்கு சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி காந்த் கேரளாவுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.
- ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எனக்கு கிடைத்த இயக்குநர்களும் , தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்கு பார்வையை புரிந்துக் கொள்கின்றனர்.
நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும்.
ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன் என்றார்.
மேலும், தான் உடல் எடை குறைத்தது தொடர்பாக அஜித் குமார் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில்,"ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்.
ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.
என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் சி ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு துறைமுகங்களும் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ளது.
- ஆயுதங்கள் பரிமாற்றிக் கொள்ள துறைமுகங்களை பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மத்திய கிழக்குப் பகுதி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பிய நிலையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஏமனில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய ஹுதைதா மற்றும் சாலிஃப் ஆகிய இரண்டு துறைமுகங்களும் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றை ஆயுதங்கள் பரிமாற்றம் செய்வதற்கான ஹவுதி பயன்படுத்தி வருகிறது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவும் ஒப்புதல்.
பீகார் மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலம் மற்றும் மத ரீதியிலான நகரான கயா (Gaya City) இனிமேல் கயா ஜீ (Gaya Jee) என மாற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். பெயர் மாற்ற பரிந்துரை வந்த நிலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புற்றுநோயை தடுக்கும் வகையிலும், சிகிச்சை அளிக்கவும் பீகார் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி சொசைட்டி அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் பிறந்த நாளான ஜனவரி 5ஆம் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் அமைச்சரவை ஒப்புதல் அழித்துள்ளது.
- என்டிஏ முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு மட்டும் அழைப்பு.
- பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு விரும்புகிறார்- ஜெய்ராம் ரமேஷ்
ஆபரேஷன் சிந்தூரிலிருந்து பிரதமர் மோடி ஆதாயம் பெற விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி மே 25ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது அரசியல் ஆதாயம் பெறுவதற்கானதாகும். ஆனால் இப்போது பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதத்தில் பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவின் நிலையை குறித்து விளக்குவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்கள் பிரதிநிதிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப பிரதமர் மோடி தற்போது திடீரென முடிவு எடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் தேசிய நலன்தான் முதன்மையானது என்ற நிலையை எடுத்து வருகிறது. பாஜகவைப் போல தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை ஒருபோதும் அரசியலாக்குவதில்லை. எனவே, இந்த பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக காங்கிரஸ் நிச்சயமாக இருக்கும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
- தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரண், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பாசப்பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக தங்களை தக்க வைத்துள்ளனர்.
காமெடியில் மட்டும் நாங்கள் கில்லாடிகள் இல்லை, கதாநாயகராகவும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று மூன்று பேரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் இன்று ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று ரிலீஸ் ஆன மூன்று படங்களில் மக்கள் மனதை கவர்ந்த கதாநாயகன் யார் என்று பார்ப்போம...
சூரி நடித்து வெளியான மாமன் திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் உணர்வுப்பூவமான கதையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக, சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் த்ரில்லர் காமெடி திரைப்படங்கள் பட்டியலில் இணைந்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல்.
தொடர்ந்து, யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.
- இந்தியா- இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் 2 போட்டிகளில் மோதுகிறது.
- இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் துணை கேப்டனாக துருவ் ஜூரலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் துணை கேப்டனாக துருவ் ஜூரலும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
18 பேர் கொண்ட இந்திய ஏ அணி:-
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன்)), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் காம்போஜ், ருதுராஜ், கான்போஜ், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே, கலீல் அகமது.