search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம்
    X

    இலங்கைக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம்

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசயதற்காக பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணி வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினார்கள்.

    முதலில் களமிறங்கு பேட்டிங் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.2 ஓவரில் 236 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    முக்கியமான போட்டி என்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நிதானமாக யோசித்து கச்சிதமாக பந்து வீசினார்கள். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் பந்து வீசி முடிக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனுக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் நியூசிலாந்து அணி வீரர்களுக்கு இதுபோல் மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்ட உபுல் தரங்கா இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×