ஆன்மிக களஞ்சியம்

1. பிரம்மா தவம் இருந்த ஸ்ரீவைகுண்டம்

Published On 2023-12-06 17:21 IST   |   Update On 2023-12-06 17:21:00 IST
  • வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • இது சூரியகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 28 வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது.

நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண்டத்தில்

வைகுண்டநாதன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த

ரகசியம் அடங்கிய ஏடுகனை ஒளித்து வைத்துக்கொண்டாராம்.

அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம் இருந்தார்.

கடும் தவம் செய்துகொண்டிருந்த பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில்

குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.

தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும்

என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக

நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இது சூரியகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

Tags:    

Similar News