ஆன்மிக களஞ்சியம்
- மனதில் சிவப்பு நிற மேனியராக ஆடை, அணிகலன்கள் தரித்தவராகத் தியானம் செய்தால் ராஜச முறை தியானமாகும்.
- உடல் நலம் சீர்பெறுகிறது.
நாம் விரும்பிய பலன்களுக்கு ஏற்றபடி பைரவ ரூபத்தை நினைத்துக் கொண்டு மனதில் தியானிக்கலாம்.
ஸ்படிக நிறத்தில் பாலகன் உருவில் தியானிப்பது சாத்வீக முறை தியானமாகிறது.
இதனால் அற்ப ஆயுள் தோஷம் நீக்கப்படுகிறது.
உடல் நலம் சீர்பெறுகிறது.
மனதில் சிவப்பு நிற மேனியராக ஆடை, அணிகலன்கள் தரித்தவராகத் தியானம் செய்தால் ராஜச முறை தியானமாகும்.
எதிரிகள் தொல்லை நீங்கி விடும்.
கருநீல வண்ணத்தில் தோன்றுபவராக தியானிப்பது தாமச முறை தியானமாக உள்ளது. சூன்யங்கள் வைப்புகள் அகலும்.
முறைப்படியாக மேற்குறிப்பிட்ட ஆபரண தேவதைக் கோடுகளோடு வரையப்பட்ட யந்திர பூஜையோடு சாத்வீக முறையில் யோக பைரவரை தியானிப்பவர்களுக்கு தங்கம் சேரும் பாக்கியமும், அளவற்ற பொருள் நிதியும் சேர்ந்திடும் என்கிறது.