ஆன்மிக களஞ்சியம்
பூதத்திடம் அனுமதி பெற்று பெருமாளை தரிசித்த நம்பாடுவான்
- நம்பாடுவான் மனங்குளிர்ந்தார். பெருமானின் திருவருளை நினைந்து கண்ணீர் விட்டார்.
- அப்போது தனக்காக பூதம் பசியோடு காத்துக் கொண்டிருப்பது அவருக்கு நினைவில் வந்து புறப்பட்டார்.
குறுங்குடிக்கு அருகே நம்பாடுவான் வந்தார். ஆலயத்தின் தொலைவில் நின்றபடியே பாட ஆரம்பித்தார்.
மனதுக்குள் சந்தோஷமும் பொங்கியது. சற்றே துன்பமும் ஏற்பட்டது.
இன்றைய ஏகாதசியும் வீணாகாமல் பாட முடிந்ததே என்பது நம்பாடுவாருக்குள் ஏற்பட்ட சந்தோஷமாகும்.
ஆனால் பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.
நம்பாடுவானின் மனத்தில் அந்த வருத்தம் அழுத்தும் முன்பாக விலகியது கொடிமரம்.
கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தார் அழகிய நம்பி.
நம்பாடுவான் மனங்குளிர்ந்தார். பெருமானின் திருவருளை நினைந்து கண்ணீர் விட்டார்.
அப்போது தனக்காக பூதம் பசியோடு காத்துக் கொண்டிருப்பது அவருக்கு நினைவில் இருந்தது. வேகமாக புறப்பட்டர்.