ஆன்மிக களஞ்சியம்
பூதத்திடம் தன்னை புசிக்க சொன்ன நம்பாடுவான்
- அவரை பிடித்துத் தூக்கியது. நம்பாடுவானிடம் எந்த சலனமுமில்லை. மிகவும் பசிக்கிறதா?
- சரி என்னைச்சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார் நம்பாடுவான். பிரம்மராட்ச பூதம் அதிர்ந்தது.
தவத்தாலும் காணமுடியாத அழகிய நம்பியின் திருவுருவைக் கண்டு தொழுதார் நம்பாடுவான்.
மனம் நிறைந்தது. சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அதிவேகமாக நடந்தார்.
அவருக்காகவே காத்திருந்த பிரம்மராட்ச பூதம் நம்பாடுவானைப் பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது.
அவரை பிடித்துத் தூக்கியது. நம்பாடுவானிடம் எந்த சலனமுமில்லை. மிகவும் பசிக்கிறதா?
சரி என்னைச்சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார் நம்பாடுவான்.
பிரம்மராட்ச பூதம் அதிர்ந்தது.
தன்னுடைய மரணத்தை இவன் எப்படி சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான்?
அப்படி இவனை நாம் சாப்பிடுவதால் அதைவிடப் பெரிதாக ஏதோ ஒன்று அவனுக்கு கிடைக்கப்போகிறது என்று தோன்றியது.
அதன் தயக்கத்தைக் கவனித்தார் நம்பாடுவான்.
என்ன யோசனை? சீக்கிரம் சாப்பிட்டு உன் பசியைத் தனித்துக்கொள். என்னுடைய விரதத்தை முடித்து விட்டேன்.
உற்சாகமாகச் சொன்னார் நம்பாடுவான்.