கால பைரவர் கோவிலில் நடைபெறும் பூஜைகள்
- தமிழகத்தில் நாய்களுக்கு பைரவர் எனவும் பொதுப்பெயர் உண்டு.
- இதில் சுவர்ண பைரவர் சிறப்பு பைரவ தோற்றங்களுடன் காட்சி தருகின்றார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை, மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது.
கால பைரவரின் சிறப்பு பெயர்கள்
சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவரும் ஒருவராவார். பைரவரின் வாகனம் நாய் என குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் நாய்களுக்கு பைரவர் எனவும் பொதுப்பெயர் உண்டு.
பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
மகா பைரவர் எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவராகவும் 64 பணிகளை செய்ய 64 பைரவர்களாக விளங்குவதாக நம்பப்படுகிறது.
இதில் சுவர்ண பைரவர் சிறப்பு பைரவ தோற்றங்களுடன் காட்சி தருகின்றார்.