ஆன்மிக களஞ்சியம்

கார்த்திகை தீபம்

Published On 2023-11-24 17:40 IST   |   Update On 2023-11-24 17:40:00 IST
  • கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது.
  • பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா

அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது.

இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும்

அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.

சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும்

அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி,

அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசை செய்வர்.

பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

இதனை, 'ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்' தத்துவம் என்கிறார்கள்.

பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

Tags:    

Similar News