ஆன்மிக களஞ்சியம்
குளத்தில் மூழ்கியும் அணையாத விளக்கு
- இம்மரபினர் இன்றும் ஆவணி மாதத்தில் இங்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
- அவ்விருவரும் நோயுள்ள இடத்திற்குச் சென்று திருநீறு வழங்க நோய் மறையும்.
காணாபத்யம்
கணபதி வழிபாடு பற்றிய காணாபத்ய சாத்திரங்கள் மயூரேசத்தில் மறைந்து போனபின் சேத்ரபாலபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாம்பசிவ சாஸ்திரிகளுக்கு மீண்டும் காணாபத்ய இரகசியங்களை ஸ்ரீ அகோரமூர்த்தியே அருளிச் செய்தார்.
காணாபத்யர்களின் குரு அகோரமூர்த்தியே.
முக்குள நயினார்கள்
முக்குள நயினார்கள் என்னும் சைவ மரபினர் தலையில் விளக்கைச் சுமந்து கொண்டு முக்குளம் மூழ்கி எழுந்த பின்னும் அவ்விளக்குகள் அணையாதிருந்தனவாம்
இம்மரபினர் இன்றும் ஆவணி மாதத்தில் இங்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
காலரா ஒழித்தது
இப்பகுதியில் உள்ள மீனவர் வாழும் இடங்களில் காலரா நோய் கடுமையாகப் பரவும் போது அகோரமூர்த்தியும் காளியும் இருவர் மேல் ஆவேசிப்பர்.
அவ்விருவரும் நோயுள்ள இடத்திற்குச் சென்று திருநீறு வழங்க நோய் மறையும்.