ஆன்மிக களஞ்சியம்

லட்சுமி வழிபாடு!

Published On 2023-08-22 18:19 IST   |   Update On 2023-08-22 18:19:00 IST
  • குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.
  • இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.

இரு யானைகளுடைய லட்சுமி

யானைகள் இரு புறமும் கலச நீராட்டும் லட்சுமியே எங்கும் சாதாரணமாகத் தென்படும் உருவம்.

முதன் முதல் இந்த கஜலட்சுமியின் வடிவிலேயே சிற்பியின் கனவு எழுந்தது.

ஸ்ரீசுக்தத்தின் வருணனையே இதற்கு அடிப்படையாகும்.

வேத காலத்திலேயே வேரூன்றிப்போன இந்தக் கற்பனையை கல்லில் எங்கும் காணலாம்.

லட்சுமி வழிபாடும் பூஜையும்

பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.

தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்து கும்பிடுகின்றனர்.

குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.

ஆனால் நம் ரீதியில் அன்று லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.

சுக்ரநீதி சாரத்தில் வீணை ஏந்திய தியான ஸ்லோகம் வருகிறது.

மகாராஷ்டிரத்தில் உழவர்கள் லட்சுமியைத் தொழுகின்றனர்.

பயிர் வளத்தைக் காட்டும் தேவதை அவள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர்.

மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.

அத்துடன் துணியில் மறைத்து ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.

ராஜபுதனத்தில் லட்சுமியை அன்ன பூரணியாக உபசரிக்கின்றனர்.

தாணியம் அளக்கும் "காரி" என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்து தாமரைப் பூக்களால் அலங்கரிப்பார்கள்.

இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.

அவள் தலையில் முத்துக் கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள்.

மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள்.

கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந் நாட்டு வழக்கம்.

தெலுங்கரும், தமிழகத்தில் ஸ்மார்த்த மரபினரும் வரலட்சுமி விரதத்தைக்கொண்டாடுவார்கள்.

கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜை.

Tags:    

Similar News