ஆன்மிக களஞ்சியம்

மகாமகதீர்த்தத்தில் நீராடினால் பரிசுத்தமாகும் ஏழு குலங்கள்

Published On 2024-07-03 11:28 GMT   |   Update On 2024-07-03 11:28 GMT
  • மகாமத் தீர்த்தம் அனைவருக்கும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கும் நினைத்த பயன்களையெல்லாம் கொடுக்கத்தக்கது.
  • இத்தீர்த்தத்தில் நீராடுகிறவன் தனது ஏழுகுலங்களை பரிசுத்தமாக்கிக் கொள்கின்றான்

இத்தீர்த்தத்தில் நீராடுகிறவன் தனது ஏழுகுலங்களை பரிசுத்தமாக்கிக் கொள்கின்றான். அவைகளாவன:

1.தன்குலம்,

2.தன்பெண்ணைக்கொண்டவன் குலம்

3.தாயின் குலம்

4.சிறியதாயின் குலம்

5.உடன்பிறந்தான் குலம்,

6.தந்தையோடு பிறந்தவன் குலம்

7.தன்மாமன் குலம்

மகாமத் தீர்த்தம் அனைவருக்கும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கும் நினைத்த பயன்களையெல்லாம் கொடுக்கத்தக்கது.

குழந்தை பேறு இல்லாதவர்கள் மகாமக குளக்கரையில் அமைந்துள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒன்பது கன்னியர்களுக்கு அபிஷேகம்,

நிவேதனம், சந்தனம், தாம்பூலம், உற்சவம் முதலானவைகளைச் செய்தபின், ஒன்பது சுமங்கலிகளுக்கு எண்ணெய், சந்தனம், குங்குமம்,புஷ்பம் கொடுத்து நல்ல விருந்தளிக்கவேண்டும்.

கோவிலுக்கு சென்று நூறு தீபம் வைக்கவேண்டும்.

இவ்வாறு நான்கு வெள்ளிக்கிழமை, கார்த்திகை சோமவாரம்,நவராத்திரி, தனுர்மாதம், இச்சமயங்களில் ஆராதித்தால் குழந்தை பேறு கிடைக்கும்.

Tags:    

Similar News