ஆன்மிக களஞ்சியம்

மகத்துவம் பொருந்திய புரட்டாசி விரதங்கள்!

Published On 2024-07-31 11:22 GMT   |   Update On 2024-07-31 11:22 GMT
  • தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி.
  • இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர்.

தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி.

இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர்.

ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி.

இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை.

அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி,

லலிதா சஷ்டி விரதம்,

உமாமகேஸ்வர விரதம்,

கேதார கௌரி விரதம்,

பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம்,

ஜேஷ்டா விரதம்

ஆகிய புண்ணிய தினங்களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.

Tags:    

Similar News