- உலகில் முதன் முதலாக கி.பி. 2-ம் நூற்றாண்டு வாக்கில்தான் முதல் நடராசர் வழிபாடே தோன்றியது.
- நடராசர் சிலை உத்திர கோசமங்கையின் ஏன் தனிப்பெரும் சொத்தாக கருதப்படுகிறது.
உலகில் முதன் முதலாக கி.பி. 2-ம் நூற்றாண்டு வாக்கில்தான் முதல் நடராசர் வழிபாடே தோன்றியது.
அதற்கு முன் சிவ வழிபாடு என்பது வெறும் லிங்க வழிபாடே
நடராசர் சிலை உத்திர கோசமங்கையின் ஏன் தனிப்பெரும் சொத்தாக கருதப்படுகிறது.
நல்ல வேளை, இந்த மரகதச் சிலையை நிறுவியவர்கள் இதற்குச் சந்தனக் காப்பு இடும் முறைமையை ஏற்படுத்தினார்கள்.
யார் கண்ணையும் இது உறுத்தாமல் தப்பித்தது. களப்பரர்கள், ஆங்கிலேயர் என்று எத்தனையோ படை எடுப்புக்களைச் சந்தித்த போதும் யாருக்கும் தெரியாமல் இது தப்பித்துக் கொண்டது.
இது மரகதம். விருப்பாட்சி சேர்த்து ஏழடி உயரம் இருக்கும்.
மரகதம் மிகவும் மென்மையான கல். சாதாரண ஒலி அலைகள் கூட மரகதத்தை உதிர வைக்கும் என்பதால், ' மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்' எனும் வழக்கு மொழி எழுந்தது.
கோவில் என்றால் மத்தளம் மேற்படி கொட்டு முழக்கு மேற்படி இல்லாமலா?
இவ்வாறு எல்லாம் மரகதச் சிலைக்கு ஊறு ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணித்தான் சந்தனக் காப்பிடும் முறையை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.
மரகதக் கல் ஒலிக்கே உதிரும் என்னில், செதுக்கும் உளிக்குமுன் எப்படித் தாங்கும் என்று பலருக்கும் சந்தேகம் எழுக்கூடும்.
இந்தச் சிலையை வடித்த விதம் ஓர் அற்புதம். உளி கொண்டு பொளிக்கப் பட்டதல்ல இச்சிலை.
மனத்தால் நினைத்து உருவாக்கப்பட்டது. இந்த விவரம் தெரியாத நம்மவர்கள் இதைச் சுயம்பு என்கின்றனர்.
இங்குள்ள நடராஜருக்கு நித்திய அபிஷேகம் எதுவும் கிடையாது. காரணம், வருடம் பூரா, சிலை சந்தனக் காப்பு தரித்தே இருக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாள் அதற்கு முதல்நாள் சந்தனக் காப்பு களையப்படும்.
அன்றுபகல் முழுக்க எம் தனிச் சபைத் தலைவனைக் காப்புக் களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம்.
அன்று முழுவதும் ஒன்பது வகை அபிஷேகங்கள் நடைபெறும்.
இரவு மறுபடியும் காப்பு இட்டபின் அடுத்த அபிஷேகம் என்பது அடுத்த திருவாதிரைக்குத்தான்.
ஆண்டுமுழுக்க மரகதச் சிலையில் காப்பிடப் பட்டிருந்த சந்தனத்தைப் பெற பக்தர்களிடையே பெரிய போட்டாப் போட்டி நடக்கும்.
இப்பொழுதெல்லாம் தேவஸ்தானத்திலேயே அதைப் பாக்கெட் போட்டு விற்க ஆரம்பித்து விட்டார்கள்.