ஆன்மிக களஞ்சியம்
- 5, 7, 9வது மாதங்களில் இந்த சீமந்த வழிபாட்டை கோவிலில் நடத்தலாம்.
- வளையல் போன்றவற்றையும் படைத்து வணங்கி வினியோகிக்கலாம்
சீமந்த வழிபாடு
ஒரு பெண் தான் கர்பம் அடைந்துள்ளோம் என அறிந்தது முதலாக பிரசவகாலம் வரை பத்து மாதங்கள் தோறும்,
ஒவ்வொரு குறிப்பிட்ட மாதத்திற்கு உரிய கிரகங்களையும் அதன் அதி தெய்வங்களை வழிபட்டு நல்ல பிரசவமாக அமையவும், அறிவும், ஆயுளும், நல்லொழுக்கமும் கொண்ட வாரிசு உருவாகி தன்வம்சத்தை விருத்தி செய்யும் குழந்தை பிறக்க இறைவனை பிராத்தனை செய்தல் நன்று.
அங்காள பரமேஸ்வரியின் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடத்தப்படுவதற்கு முன்பு, அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துவதை மரபாக வைத்துள்ளனர்.
5, 7, 9வது மாதங்களில் இந்த சீமந்த வழிபாட்டை கோவிலில் நடத்தலாம். இந்த வழிபாட்டை செய்பவர்கள் 7 வித சாதம் செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டு பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும்.
வளையல் போன்றவற்றையும் படைத்து வணங்கி வினியோகிக்கலாம்