ஆன்மிக களஞ்சியம்

மும்மூர்த்திகளின் அருள் கிடைக்கும் அமாவாசை பிரதட்சணம்

Published On 2024-07-03 11:31 GMT   |   Update On 2024-07-03 11:31 GMT
  • திங்கட்கிழமையும் அமாவாசையும் ஒன்றுசேரும் தினத்தை பிரதட்சண அமாவாசை என்று சொல்வார்கள்.
  • அன்றைய தினம் காலையில் வேப்ப மரத்துடன் சேர்ந்திருக்கும் அரச மரத்தை 108 தடவை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

திங்கட்கிழமையும் அமாவாசையும் ஒன்றுசேரும் தினத்தை பிரதட்சண அமாவாசை என்று சொல்வார்கள்.

அன்றைய தினம் காலையில் வேப்ப மரத்துடன் சேர்ந்திருக்கும் அரச மரத்தை 108 தடவை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

அன்று காலை குளித்து விட்டு மரத்தினருகில் சென்று அமாஸோமவார புண்ய காலே அசுவத்த ப்ரதட்சிணம் கரிஷ்யே என்று சொல்லி விட்டு பக்தியுடன் 108 அல்லது 54 அல்லது 21 தடவையாவது பிரதட்சணம் செய்யலாம்.

அரச-வேம்பு மரத்தை பிரதட்சணம் செய்வதால் பாபங்கள் விலகும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அருளும் கிட்டும், ஏழரைச் சனியின் துன்பங்கள் விலகி ஆயுள் அதிகரிக்கும்.

தை மாதம் அமாவாசையில் திங்கட்கிழமையும் சூரிய உதய காலத்தில் திருவோண நட்சத்திரமும் வ்யதீபாத யோகமும் ஒன்றாகச் சேர்ந்தால் அன்று மஹோதய புண்ணிய காலம் எனப்பெயர்.

எப்போதாவதுதான் நிகழும், இந்த நாளில் புண்ணிய நதியில் நீராடல், மந்திர ஜபம், பூஜைகள், ஹோமங்கள் மற்றும் தானங்கள் செய்வது அனைத்து தெய்வங்களையும் மகிழ்விக்கும்.

அதிக அளவு புண்ணியங்களைத் தரும் என்கிறது சாஸ்திரம். 

Tags:    

Similar News