முருகனை பாடாத நாக்கினை காணிக்கையாக்க அளித்த அண்ணாசாமி
- பழனிச் சாது தெரிவித்தது போன்று, புதுமையான காணிக்கை செலுத்திய மனநிறைவு அவருக்கு ஏற்பட்டது.
- அப்போது அங்கே இருந்த மக்கள் அண்ணாசாமியாரின் செய்கையைக் கண்டு மிகவும் வியப்புற்றனர்.
முருகனைப் பாடாத நாக்கினைப் பெற்ற நாம் நமது நாக்கையே அவன் முன் ஏன் பலியிட்டுக் காணிக்கை செலுத்தக் கூடாது? என்ற எண்ணம் தோன்றியது.
உடனே அவர் சிறிதும் தாமதிக்காமலும், தயங்காமலும் 'முருகா! முருகா!' எனக் கூவி அழைத்துத் தமது சாவிக்கொத்தில் இருந்த சிறு கத்தியை எடுத்து நாக்கை அறிந்து ஓர் இலையில் ஏந்திப் பலி பீடத்தின் அடியில் வைத்து, அடியற்ற மரம்போலத் தணிகை அண்ணலின் முன் வீழ்ந்து வணங்கினார்.
பழனிச் சாது தெரிவித்தது போன்று, புதுமையான காணிக்கை செலுத்திய மனநிறைவு அவருக்கு ஏற்பட்டது.
அப்போது அங்கே இருந்த மக்கள் அண்ணாசாமியாரின் செய்கையைக் கண்டு மிகவும் வியப்புற்றனர்.
அச்சமும் அன்பும் பக்தியும் மதிப்பும் கலந்த ஒருவகை உணர்ச்சி அவர்களை ஆட்கொண்டது.
அண்ணாசாமியாரை அணுகி நின்று, அவர் யார்? எந்த ஊர்? ஏன் அவர் தமது நாக்கை அறுத்துக் கொண்டார்? என்றெல்லாம் அறிந்து கொள்ள, மக்கள் ஆவல் கொண்டனர்.
ஆனால் எப்படி அவரைக் கேட்பது?அவர் தம் நாக்கை அறுத்துக் கொண்டு தம்மை மறந்த நிலையில் இருக்கின்றாரே! என்று மயங்கினர்.
நாக்கு துண்டிக்கப்பட்டதால் குருதி பெருக மயங்கிக் கிடந்த நாயகரின் முகத்தில், அன்பர்கள் சிலர் தண்ணீர் தெளித்துப் பணிவிடைகள் செய்தனர்.
நீண்ட நேரம் கழித்து நாயக்கர் நினைவு பெற்றுக் கண்விழித்தார். அன்பர்கள் துணை செய்ய மெல்ல எழுந்து நின்றார். சிறிது தண்ணீர் பருகினார்.
குளிர்ந்த நீர் பட்டபின் ரத்தம் அறவே நின்று விட்டது.
வாய் பேச வராத நிலையிலும் நாயக்கர் முருகா!முருகா! என்று குழறிக்குழறி முணுமுணுத்தார். கோவிலை வலம் வந்தார்!
அருகில் இருந்த - படக்கடையில் முருகன் படம் ஒன்றைப் பார்த்து வணங்கினார்.
யாரோ ஒர் அன்பர் உடனே அப்படத்தை வாங்கி அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
நம் அண்ணாசாமியார் தமக்கு அந்த முருகன் படம் கிடைத்ததைப் பெரும்பேறு - என்று கருதி அதைத் தம் தலைமேல் வைத்துக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடி இன்புற்றார்.