ஆன்மிக களஞ்சியம்

முருகனுக்குரிய முக்கிய விரதங்கள்

Published On 2023-11-02 16:38 IST   |   Update On 2023-11-02 16:38:00 IST
  • ஆன்ம ஒளியை அகத்தில் கண்டு தரிசிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.
  • தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.

விரதம் என்பதற்று 'ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல்' என்று பொருள்.

வுஜீரத காலங்களில் சாப்பிடாமல்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

மிதமாக உண்பதும், தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.

மனம் ஒடுங்க புலன் ஒடுங்கும், புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும், அகம் ஒடுங்க ஆன்ம ஒளி பிரகாசிக்கும்.

ஆன்ம ஒளியை அகத்தில் கண்டு தரிசிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.

மனதை அடக்கி இறைவன் திருவடிகளில் நிலைத்திருக்க செய்யும் தொடர் பயிற்சியின் மூலம் ஆன்ம ஒளியை தரிசிக்க முடியும்.

முருகனுக்குரிய விரதங்கள் மூன்று:

வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம்

நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்

திதி விரதம் : சஷ்டி விரதம்

Tags:    

Similar News