- தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.
- சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.
சுக்கிரன்
தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.
இவரே சுக்கிர பகவானாகப் போற்றப்படுகிறார்.
சுக்கிர பகவானின் திசை கிழக்கு என்றும் சுக்கிரனின் அதிதேவதை இந்திராணி என்றும் பிரத்யதி தேவதை இந்திரன் என்றும் சுக்கிர பகவானை வணங்கி வழிபடுவதற்கு உரிய திருத்தலம் ஸ்ரீரங்கம் என்றும் ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.
சுக்கிர பகவான் சுபமான யோககாரகன் எனப்படுவார். உலக வாழ்வில், எத்தனை சந்தோஷங்கள் தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருள்பவர் சுக்கிர பகவான்.
குறிப்பாக மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன்.
அதற்கு அடிப்படையான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் தான்.
சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.
சுக்கிர பகவானுக்கு உரிய சுக்கிர வாரத்தில் சுக்கிர ஹோரையில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.
சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயத்!
என்கிற சுக்கிர பகவானின் காயத்ரியை ஜபித்து வருவது இன்னுமான பல பலன்களையும் யோகங்களையும் தந்தருளும்.
வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எந்தநாளில் வேண்டுமானாலும் சுக்கிர பகவான் காயத்ரியைச் சொல்லி வழிபடலாம்.
குறிப்பாக, ஒவ்வொரு நாளிலும் வருகிற சுக்கிர ஹோரை நேரத்தில் வீட்டில் அமர்ந்தபடி சுக்கிர பகவான் காயத்ரி சொல்லி வழிபடுவது, சகல சம்பத்துகளையும் வழங்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.