ஆன்மிக களஞ்சியம்

ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்

Published On 2023-09-02 13:15 GMT   |   Update On 2023-09-02 13:16 GMT
  • சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.
  • முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்

சான்றோருடையது தொண்டை நன்னாடு என்பதால் கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார்.

கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர். இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.

சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.

திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.

இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.

திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.

இவர் கேரள நாட்டினர்.

பல கலைகளையும் பயின்றவர் என்று தமிழக வரலாற்றில் (பக்கம் 356) கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு கூறுகிறது.

இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.

கம்பர் உவச்சர் குலத்தவர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.

இரவில் தமிழில் பாட்ல எழுதும் போது வட்டபாறை நாச்சியார்,பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.

ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே

வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே

நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்

பிந்தாமல் பந்தம் பிடி

தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத்தொண்டு செய்துள்ளதும், சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒருபெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.

Tags:    

Similar News