ஆன்மிக களஞ்சியம்
- அவர்கள் மத்தியில் ஒளிப் பிழம்பாக, பிரம்மாண்ட வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார்.
- அந்த மலையைப் பூஜிப்பதும் கடினம் என்பதால், தானே ஒரு அழகிய லிங்க வடிவெடுத்து காட்சி தந்தார்.
திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று விவாதித்தனர்.
அவர்கள் மத்தியில் ஒளிப் பிழம்பாக, பிரம்மாண்ட வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார்.
அந்த ஜோதியின் ஆதியையும், அந்தத்தையும் காண முடியாது நான் முகனும், நாராயணும் திகைத்தனர்.
பரமேஸ்வரனே பரம்பொருள் என்று போற்றினர்.
அவர்கள் பக்திக்கு இறங்கி ஒரு மலை வடிவானார் சிவ பெருமான்.
அந்த மலையைப் பூஜிப்பதும் கடினம் என்பதால், தானே ஒரு அழகிய சிவலிங்க வடிவெடுத்து காட்சி தந்தார்.
இந்த சிவலிங்கத் திருமேனியே ஸ்ரீ அருணாசலேசுரர் ஆகும்.