ஆன்மிக களஞ்சியம்

தென்காசி கோவில் வீரபத்திரர்

Published On 2023-09-05 17:02 IST   |   Update On 2023-09-05 17:02:00 IST
  • வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.
  • எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.

தென்காசி கோவில் வீரபத்திரர்

வீரம் என்பதற்கு அழகு என்றும் பத்திரம் என்பதற்கு காப்பவன் என்றும் பொருள் கொண்டு வீரபத்திரர் அழைக்கப்படுகிறார்.

வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.

சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழிலாற்றுகிறான்.

இம்முகங்களில் அகோராம்சமாக ஆணவாதிகளை அழிப்பதற்காக வீரபத்திரரை படைத்தான் என்று குறிப்பிடுவர்.

வீரபத்திரரை திருஞானசம் பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் மாணிக்கவாசகரும் பலவாறாக, தேவாரங்களில் பெயர் சூட்டாமல் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.

சைவப்பெருமக்கள் வீரபத்திரரை சிவகுமாரராகவும், சிவாம்சமாகவும், சிவ வடிவ மாகவும் கண்டு வழிபட்டு வருகிறார்கள்.

வீரபத்திரரை வீரசைவர்கள் தங்கள் பிரதான குருவாக கொண்டு போற்றி வழிபடுகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், திருவானைக்காவு என பல்வேறு இடங்களில் வீரபத்திரருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

அவற்றில் மிகவும் கலைநயமிக்க வகையில் தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.

ஆனால் தென்காசி கோவிலில் மட்டும் தனியாக 2 கல்தூணில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே இங்குள்ள வீரபத்திரர் சிலைதான் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வீரபத்திரருக்கு தனியாக எந்த வழிபாடும் நடத்தப்படுவதில்லை.

எப்போதும் நடைபெறுவது போல் பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது.

அனைத்து கோவில்களிலும் சப்தகன்னிகள் அருகே வீரபத்திரர் சந்நதி அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இங்கு மட்டும் தூணில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.

Tags:    

Similar News