ஆன்மிக களஞ்சியம்

திருமண பாக்கியம் அருளும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரத வழிபாடு

Published On 2023-11-02 18:40 IST   |   Update On 2023-11-02 18:40:00 IST
  • ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
  • நரசிம்மர் ஆலயத்தில் நெய் தீபம் 9 வாரம் போட்டு வருவது மிகவும் நல்லது

செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து

வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

செவ்வாய் தோஷம் நிறைய பேரை படாதபாடு படுத்தி விடுகிறது.

சில பெண்களுக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடுவது தாமதம் ஆகிவிடுகிறது.

எனவே செவ்வாய் தோஷ பாதிப்பில் இருப்பவர்கள் உரிய பரிகாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பல வழிபாடுகள் இருந்தாலும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு சிறப்பானது.

லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து படத்துக்கு முன்னால் தீபம் ஏற்றி பூஜை பொருட்கள் உபயோகித்து

ஸ்ரீநரசிம்மரை வழிபட வேண்டும், நிவேதனமாக பானகம் வைக்க வேண்டும்.

(நீர்+ ஏலம் + எலுமிச்சை +துளசி+ வெல்லம்= இதன் கலவையே பானகம் ஆகும்)

பூஜையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் (அல்லது) செவ்வாய் ஹோரையில் செய்யவும்.

பிரதோஷ காலத்தில் அவசியம் செய்ய வேண்டும்.

ஸ்ரீ வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்ட இந்த ஸ்லோகத்தை 28 முறை ஜபிக்கவும்.

"ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம;

லட்ணம் பாணிஜை;

அவ்யாத் த்ரீணிகனநீத்யகுண்ட மஹிமா

வைகுண்ட கண்டீரவ;

யத்ப்ரா துர்பவநா தவந்த்ய ஜடரா

யாத்ருச்சிகாத் வேதஸாம்

யா காசித் ஸஹஸா மஹாஸீர க்ருஹ

ஸ்த்தூணா பிதா மஹ்யபூத்"

தினமும் கூட ஜபித்து வரலாம்.

செய்யும் தொழிலில் பாதிப்பு உள்ளஎவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இந்த மூலமந்திரத்தை தினம் 9 முறை ஜபித்து வரலாம்.

நல்ல பலன் கிடைக்கும்.

சுவாதி நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த பூஜையை செய்யலாம்.

பூஜை முடிவில் பக்கத்தில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று நரசிம்மரை வணங்கி வரவும்.

நரசிம்மர் ஆலயத்தில் நெய் தீபம் 9 வாரம் போட்டு வருவது மிகவும் நல்லது.

Tags:    

Similar News