உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கிறான்-கனவில் கூறிய பெரியவர்
- திருப்போரூர் சென்று தொழுதும் வயிற்று வலி தீர்வதாக இல்லை.
- வீட்டில் உறவினர்கள் வருந்திக் கவலைப்பட்டனர்.
திருப்போரூர் சென்று தொழுதும் வயிற்று வலி தீர்வதாக இல்லை. வீட்டில் உறவினர்கள் வருந்திக் கவலைப்பட்டனர்.
இவ்வளவு வயிற்று வலியுடன், ஏன் திருப்போரூருக்கு நடந்து சென்று அல்லல் படுகிறீர்கள்?'' என்றும் அன்பால் தடுத்தனர்.
அவன் விட்ட வழி ஆகட்டும். அவனையன்றி நமக்கு வேறு துணை இல்லை.
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும், யான் திருப்போரூர் சென்று முருகனை வழிபட்டே தீருவேன்'' என்று கூறி, மூன்றாம் முறையும் அண்ணாசாமியார் திருப்போரூர் சென்று முருகனைப் பணிந்து வழிபட்டார்.
வழிபாட்டை முடித்துக் கொண்டு சிதம்பர சுவாமிகள் சன்னதியில் எதிரில் இரவு படுத்துக் கொண்டார்.
அப்போது கனவில் ஒரு பெரியவர் தோன்றி, ''உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கிறபொழுது, நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு அல்லல்பட்டு ஓடி வருகின்றாய்?'' அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே?'' என்று கூறக் கேட்டு, உறக்கத்தில் இருந்து திடீரென விழித்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.
செய்தியை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிவித்து, அன்று முதல் தம் வீட்டிலேயே காலை மாலை இருவேளைகளிலும், முருகனை நினைத்து வழிபாடு செய்து வந்தார்.