ஆன்மிக களஞ்சியம்
வடபழனி கோவில் வரலாறு-ஸ்ரீரத்தினசாமிச்செட்டியார்
- அன்று நிகழ்ந்த வழிபாட்டில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.
- அன்று முதல் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபாட்டுக்கு வந்து கலந்து கொண்டார்.
அண்ணாசாமித் தம்பிரானின் அரிய பக்தியையும், குறி சொல்லும் சிறப்பையும் கேள்வியுற்று அவரை நாடிய அன்பர்கள் பற்பலர்.
அவர்களுள் தேனாம்பேட்டையில் வாழ்ந்து வந்த ரத்தினசாமிச்செட்டியார் என்பவரும் ஒருவர்.
அவர் ஆயிரம் விளக்குப்பகுதியில் ஒரு மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்.
1953-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று முதன் முதலில் செட்டியார் அண்ணசாமி தம்பிரானை கண்டார்.
அன்று நிகழ்ந்த வழிபாட்டில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.
அன்று முதல் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபாட்டுக்கு வந்து கலந்து கொண்டார்.
தம்முடைய செலவில் பழனி ஆண்டவருக்குப் பூ, பழம், ஊது வத்தி, கற்பூரம் ஆகிய வழிபாட்டுப் பொருள்களை வாங்கி வந்து கொடுப்பது அவருக்கு வழக்கமாயிற்று.