ஆன்மிக களஞ்சியம்
வரதராஜ பெருமாளின் வனபோஜனம்

வரதராஜ பெருமாளின் வனபோஜனம்

Published On 2024-01-07 17:32 IST   |   Update On 2024-01-07 17:32:00 IST
  • 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்ம பெருமாள் சந்நிதியை அடைகிறார்.
  • காஞ்சி வரதராஜ பெருமாள், 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோவிலுக்கு செல்வார்.

பொங்கல் அன்று இரவு 10 மணிக்கு பார்வேட்டைக்குக் கிளம்பும் காஞ்சி வரதராஜ பெருமாள், 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோவிலுக்கு செல்வார்.

அங்கு 'வனபோஜனம்' விழா சிறப்பாக நடந்து முடிந்ததும், மறு நாள் பகல் 12 மணியளவில் வரதர், 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்ம பெருமாள் சந்நிதியை அடைகிறார்.

பிறகு, அங்கிருந்து ஸ்ரீவரதராஜ பெருமாளும், ஸ்ரீபுரம் நரசிம்மரும் 'திருமுக்கூடல்' எனும் இடத்தில் உள்ள ஸ்ரீ நிவாசபெருமாள் கோவிலுக்குப் புறப்படுவர். மூன்று பெருமாள்களும் அன்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

கருடசேவை

இங்கு, கருடசேவை வருடத்துக்கு மூன்று முறை அதாவது வைகாசி-விசாகம் (நம்மாழ்வார் திருநட்சத்திரம்)

பிரம்மோற்சவம், ஆனி-சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி-பௌர்ணமி கஜேந்திர மோட்சம்

ஆகிய வைபவங்களின்போது நடைபெறுகிறது.

Tags:    

Similar News