ஆன்மிக களஞ்சியம்
- ஸ்ரீ வீரபத்திரர் பெரிதும் விரும்பும் நிறம் பொன் மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறமாகும்.
- வீர பத்திரருக்கு வேட்டி, தலைப்பாகை அணிவிப்பதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.
வீரபத்திரருக்கான உடைகள்
வீரபத்திரருக்கு ஆடை அணிவித்தல், பொட்டு வைத்தல், மலர்களை சூட்டி மகிழ்தல், தூபமிட்டுப் போற்றுதல் என்று பல்வேறு வகைகளில் அலங்காரம் செய்து வழிபாடு செய்வது எல்லா கோவில்களிலும் வழக்கத்தில் உள்ளது.
பொன் மஞ்சள்/ செந்நிற ஆடை
ஸ்ரீ வீரபத்திரர் பெரிதும் விரும்பும் நிறம் பொன் மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறமாகும்.
கண்ணைப் பறிக்கும் பளபளப்பு நிறைந்த பொன் மஞ்சள் நிறத்தில் சிகப்பு நிறச் சாயல் கலந்த நிறத்தில் உள்ள ஆடை இவருக்கு உரியதாகும்.
வேறு நிறங்களை இவர் விரும்புவதில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் வீரபத்திரருக்கு, நேர்த்திக் கடன் வழிபாட்டின் போது செந்நிற ஆடை அணிவிக்கின்றனர்.
மம்சாவரம் ஆகாச கருப்பண்ணசுவாமி கோவிலில் மகா சிவராத்திரித் திருவிழாவின் போது, வீர பத்திரருக்கு வேட்டி, தலைப்பாகை அணிவிப்பதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.