திட்டமிட்டு செயலாற்றும் மேஷ ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் லாபாதிபதி சனி, லாப ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அது கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காரியம் இம்மாதம் நடைபெறும்.
கும்பம் - புதன்
மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதி பதியான புதன், லாப ஸ்தானத்திற்கு வருவது யோகமான நேரம்தான். சகோதர வர்க்கத்தினரால் நன்மைகள் கிடைக்கும். உங்கள் கூட்டு முயற்சிக்கு அவர்கள் உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். புதிய உத்தியோகத்திற்காக ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால் அது கைகூடும்.
மகரம் - சுக்ரன்
மாதத் தொடக்க நாளில், மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கும்போது 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படும். எனவே குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறப்பு களின் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். 'வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைத்து வருமானம் உயரும்.
மீனம் - புதன்
மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது நன்மைதான். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவதால் சில நன்மை கள் நடைபெறும். எதிரிகள் விலகுவர். எடுத்த காரியத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். கடன் சுமை குறையும். உடல்நலம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். அதேசமயம் உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துவர். உறவினர்கள் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும்.
கும்பம் - சுக்ரன்
மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாபஸ்தானத்திற்குச் செல்லும்போது, தொழில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். கூடுதல் லாபம் கிடைக்கும். பஞ்சமாதிபதி சூரியனும் புதனோடு இணைந்து சஞ்சரிப்பதால், பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறும். அவர்களின் மேற்படிப்புக்காகவும், வெளிநாடு செல்லும் வாய்ப்பிற்காகவும் முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு ஊதிய உயர்வின் காரணமாக இடமாற்றம் செய்யும் வாய்ப்பு அமையும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு, போட்டிகளை சமாளிக்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 17, 18, 22, 23,
மார்ச்: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.