முடியாத காரியத்தை முடித்துக் கொடுக்கும் மேஷ ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். அதே சமயம் தனாதிபதி சுக்ரன், சகாய ஸ்தானாதிபதி புதனோடு இணைந்து உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு. வீடு மாற்றம், இடமாற்றம் மகிழ்ச்சி தரும். உடன்பிறப்புகள் வழியே திரு மணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.
ரிஷப - சுக்ரன்
வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசிக்கு தனாதிபதியான அவர், தன ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகமான நேரமாகும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். புணிபுரியும் இடத்தில் வீடு, வாகனம் வாங்க விண்ணப்பித்தவர்களுக்கு, அந்த முயற்சி கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நீண்ட நாட்களாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும்.
ரிஷப - புதன்
வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6-க்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்தில் வருவது நல்ல நேரம்தான். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். வாங்கிய கடனை கொடுத்து மகிழ வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா?' என்று யோசிப்பீர்கள்.
மேஷ - செவ்வாய்
வைகாசி 18-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிநாதன், உங்களுடைய ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உயர் பதவி யில் இருப்பவர்கள், உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சில சூட்சுமங்களை மேலதிகாரிகளே கற்றுக் கொடுப்பார்கள். உங்கள் பணி, மற்றவர்களின் மனதை ஈர்க்கும் விதத்தில் அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.
மிதுன - புதன்
வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். சகாய ஸ்தானாதிபதி புதன், சகாய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும். செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். செய்தொழிலில் லாபம் உண்டு. வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் கைகூடிவரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மிதுன - சுக்ரன்
வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்கும் சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு செல்லும்போது பொருளாதார நிலையில் திருப்தி காணப்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்கள், பலமான போட்டிகளுக்கு இடையில்தான் வெற்றியைப் பெற முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர் களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ-மாணவிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண் களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 14, 15, 26, 27, 28, ஜூன்: 1, 5, 6, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.