25.9.2023 முதல் 1.10.2023 வரை
விருப்பமும் கனவுகளும் நிறைவேறும் வாரம். 2, 7-ம் அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தில் நின்று தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை வருமானம் கிடைக்கும்.தொழில் நிறுவ னத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். சக ஊழியர்க ளால் அதிக நன்மை கிடைக்கும். உங்க ளை வாட்டிய கடன் பிரச்சினை மற்றும் வாழ்க்கைத் துணையின் பிரச்சினை தீரும். விரைவில் ஜென்ம ராகுவால் சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும்.குடும்ப உறவுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு ஆனந்தமாக இருப்பீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.திருமண பந்தத்திற்குள் நுழையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.மேலும் வளம் பெற காக்கைக்கு எள் கலந்த சாதம் மற்றும் தண்ணீர் வைக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406