துலாம் - வார பலன்கள்

வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

Published On 2024-10-14 04:53 GMT   |   Update On 2024-10-14 04:54 GMT

தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும் வாரம். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. ராசியில் சூரியன் புதன் சேர்க்கை. புத ஆதித்யயோகம். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும்.வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும்.

தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரவத்திற்காக வலியச் சென்று அகப்படுவார்கள். அம்பிகை வழிபாடு சிறப்பைத் தரும். 19.10.2024 அன்று மாலை 4.30-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்கா ததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். லஷ்மிநரசிம்மரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News