துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

Published On 2024-11-25 02:28 GMT   |   Update On 2024-11-25 02:29 GMT

24.11.2024 முதல் 30.11.2024 வரை

எண்ணங்கள் ஈடேறும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு செல்வாயின் 4-ம் பார்வை என துலாம் ராசிக்கு கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளது. தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு, கடும் விரோத நிலை மாறும். குலத் தொழில் வளர்ச்சி பல மடங்காகும். பணவரத்து திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். சுபச்செலவுகளும் அதிகமாகும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், சொத்து மதிப்பு உயர்தல், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள்.

மறு திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மருத்துவமனைச் செலவு முற்றிலும் அகலும். வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று வரும் அளவிற்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிக்க முயற்சிக்கலாம். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News