துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை

Published On 2024-12-09 02:14 GMT   |   Update On 2024-12-09 02:16 GMT

8.12.2024 முதல் 14.12.2024 வரை

பண பிரச்சினை நீங்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தான அதிபதி செவ்வாயின் பார்வையில் சஞ்சரிப்பதால் முயற்சிகளுக்கான பலன்களை உடனடியாக காண முடியும். காரியத் தடை நீங்கும். திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.விண்ணப்பித்த வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெற்று. அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சிறு மன பிணக்கு ஏற்படலாம். தந்தை, மகன் கருத்து வேறுபாடு அகலும். மற்றவர்களிடம் பேசும் போது பொறுமையுடன் பேசுவது நல்லது.ஆரோக்கிய குறைபாடு அகலும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் செல்ல வேண்டி வரலாம்.முக்கிய முடிவுகளை குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். சிவனுக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபட கூடுதல் நற்பலன்கள் நடைபெறும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News