துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

Published On 2024-09-30 02:16 GMT   |   Update On 2024-09-30 02:17 GMT

29.9.2024 முதல் 5.10.2024 வரை

தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சுக்ரனுக்கு திரிகோணத்தில் சனி மற்றும் செவ்வாய் சஞ்சரிப்ப தால் இது துலாம் ராசிக்கு அதிர்ஷ்டத்தை அதி கரிக்கும் அமைப்பாகும். திரிகோணமும், திரிகோணா திபதிகளும் பலம் பெறுவதால் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.வரவும் செலவும் சமமாக இருக்கும்.வேலையாட்களிடம் நிலவி வந்த குழப்பம் மறையும். புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். சிலர் தொழில் உத்தியோகத்திற்காக வீடு, ஊர், நாடு மாற்றம் செய்யலாம்.திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். வீடு கட்ட நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும்.அமாவாசையன்று காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News