வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை
1.12.2024 முதல் 7.12.2024 வரை
கவலைகள் அகலும் வாரம். ராசி அதிபதி சுக்ரனை குரு, செவ்வாய் பார்க்கிறார்கள். இந்த கிரகங்களின் கூட்டணி துலாம் ராசியினருக்கு மிகச் சாதமாக உள்ளது. உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.
மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பெயர், புகழ் அந்தஸ்து உயரும். கவுரவப் பதவிகள், குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும். சேமிப்பு கரையும் பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம். நரசிம்மரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406