துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

Published On 2024-10-07 02:27 GMT   |   Update On 2024-10-07 02:27 GMT

6.10.2024 முதல் 12.10.2024 வரை

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரனும், பாக்கிய அதிபதி புதனும் ராசியில் சேர்க்கை பெறுவது துலாம் ராசிக்கு சுபத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். பொருளாதாரத்தில் நிலவிய சிக்கல், சிரமங்கள் விலகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்த தேவையான தொழில் கடன் கிடைக்கும்.பூர்வீகம் தொடர்பான சில தடைகள், தாமதங்கள், மனக்குழப்பம் ஏற்படலாம். சிலர் வழக்குகளை வாபஸ் பெறலாம் அல்லது ஒத்தி வைக்கலாம்.குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

பூமி,வீடு, வாகனம் வாங்கும் சிந்தனைகள் மேலோங்கும். சொத்து சம்பந்தப்பட்ட விசயங்களில் சாதகமான பலன் உண்டு. வீட்டில் சுப காரியப் பேச்சுவார்த்தைகள் நடக்கும். உயர் கல்விக்கு சிலர் வெளிநாடு செல்லலாம். வார ஆரம்பத்தில் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி உண்டு. அரசு சார்ந்த செயல்களில் கவனத்துடன் செயல்படவும். ஊதிய உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துகளை வெளிப்படுத்தவும். முப்பெரும் தேவிகளை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News