வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை
20.10.2024 முதல் 26.10.2024 வரை
அனுகூலமான வாரம். ராசியில் லாப அதிபதி சூரியன் மற்றும் 9,12-ம் அதிபதி புதன் சேர்க்கை உள்ளதால் தொழில் வகையில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். வியாபாரி களுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகள் அகலும். வேலை இல்லாமல் இருந்த வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் ஏற்படும்.அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும் நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் யாரிடமும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
போட்டி பந்தயங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு அழகான ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். 21.10.2024 அன்று மாலை 6.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும். ஓய்வின்றி உழைக்க நேரும். எந்த காரியமும் அதிக முயற்சிக்குப் பிறகே பலன் தரும். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. நவகிரக சுக்கிரனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406