தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

தை மாத ராசிபலன்

Published On 2024-01-11 04:37 GMT   |   Update On 2024-01-11 04:39 GMT

புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுவாழும் தனுசு ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கின்றார். நவக்கிரகங்களில் சுப கிரகமான குருவின் பார்வை பலத்தால் நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள்கள் வாங்கும் யோகம் உண்டு. எடுத்த முயற்சிகளில் வெற்றியும், இனிய சுபகாரியங்களும் படிப் படியாக நடைபெறப் போகின்றது. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

மேஷ-குருவின் சஞ்சாரம்!

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவர் பார்வையினால் தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். அவர் உங்கள் ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். தொழில் வளர்ச்சி, உத்தியோக முன்னேற்றம் உண்டு. குருவின் பார்வை 9, ௧௧ ஆகிய இடங்களில் பதிவது யோகம் தான். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினை அகலும். தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும்.

தனுசு-சுக்ரன்!

ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும். முன்னேற்றப் பாதையில் ஒரு சில குறுக்கீடுகள் வந்து சேரும். முகஸ்துதிபாடி பழகியவர்களை நம்பி எதையும் செய்யவேண்டாம். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும்.

மகர-புதன்!

ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தொழில் ஸ்தானாதிபதி புதன், தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பதவி உயர்வு கிடைக்கும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் அமைப்பு ஒரு சிலருக்கு உண்டு. கவுரவம், அந்தஸ்து உயரும். கொடுக்கல்-வாங்கல்களில் சரளநிலை உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மகர-செவ்வாய் சஞ்சாரம்!

பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். மகரம், செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம் பெறும் பொழுது பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாக வழிபிறக்கும். `பூர்வீக சொத்துக்களை விற்று விட்டுப்புதிய சொத்துக்களை வாங்கலாமா?' என்று யோசிப்பீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் தொழில் செய்பவர் களுக்கு நிதி நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். மாணவ-மாணவியர்களுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படும் மாதமிது. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் திருமணப் பேச்சு முடிவாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி:17, 18, 28, 29, பிப்ரவரி: 1, 2, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

Similar News