வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
வாழ்க்கைத் தரம் உயரும் நேரம். ராசி அதிபதி சுக்ரன் குருவுடன் பரிவர்த்தனை செய்வதாலும் ராசிக்கு புதன் பார்வை இருப்பதாலும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட பொருள், பண வரவால் வாழ்வாதாரம் உயரும். வழக்குகளில் விரும்பிய நல்ல தீர்ப்பு கிடைக்கும். வீடு, வாகனத்திற்காக கடன் வாங்குவீர்கள். விருப்ப விவாகம் நடைபெறும். அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள்.
ரிஷப ராசிக்கு 9, 10ம் அதிபதியான சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடைபெறும். விலகிய குடும்ப உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தையின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்களுடன் நிலவிய பிணக்குகள் மறையும். தொழில், வியாபாரத்தில் நிலவிய போட்டி, பொறாமைகளை சமாளிப்பீர்கள். ராசியில் குரு நிற்பதால் கவுரவம் பங்கப்படாமல் எளிதாக சமாளித்து விடுவீர்கள். பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406