வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
சுப பலன்கள் அதிகரிக்கும் வாரம். குடும்ப பிரச்சனைகள் அகலும். ராசி அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தான அதிபதி சனியுடன், தொழில் ஸ்தானத்தில் இணைவது மிக சிறப்பான அமைப்பாகும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆனந்தம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச்சந்தை மூலம் வருமானம் பெருகும்.
பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள். திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டா கும். அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406