வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை
17.11.2024 முதல் 23.11.2024 வரை
நன்மைகள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் அஷ்டமாதிபதி குருவுடன் பரிவர்த்தனை செய்வதால் சிந்தனையின் போக்கில் நிலவிய குழப்பம் விலகும்.மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.வெளிநாட்டு முயற்சிகள் தடையின்றி வெற்றி தரும். குடும்ப உறவுகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிஉலகில் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். தொலைந்த சில ஆவணங்கள் கிடைக்கும்.
வியாபாரம் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். எதிர்காலம் மற்றும் சேமிப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் கூடும். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். சொத்து பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு காரியத்தை சாதிப்பீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் ஏற்படும். உடல் நலம் சீராகி நிம்மதியாக தூங்குவீர்கள். தேய்பிறை அஷ்டமியன்று அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406