வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை
15.12.2024 முதல் 21.12.2024 வரை
பொறுமையாக நிதானமாக இருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் குருப் பார்வையில் சஞ்சாரம். சுக ஸ்தான அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். கிரக நிலவரத்தில் சாதகமும், பாதகமும் சேர்ந்து உள்ளது. பங்காளிகளால் ஏற்பட்ட பாகப் பிரிவினை வருத்தங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்காவிட்டாலும் சுமூகமாக நல்ல முறையில் சொத்து கிடைக்கும். இதுவரை குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கிய ரிஷப ராசி பெண்களுக்கு ஆண் வாரிசு கிடைக்கும். சிலருக்கு நீண்ட நாள் மருந்து சாப்பிடும் நோயின் அறிகுறி தென்படும்.
வயதானவர்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். தொழில் விரிவாக்கம், வீடு கட்டும் பணி, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.சிலர் பிழைப்பிற்காக வெளியூர் , வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல நேரும். பலருக்கு இந்த வாய்ப்பு திருப்புமுனையாகவும் இருக்கும். எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் திருக்கோளாற்று பதிகம் ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406